கடைசிப் பையன் பேரு எலி குமாரா

கடைசி பையன் பேரு எலி குமார்
#######################

ஏய்யா உனக்கு அழகான நாலு பசங்க. அவுங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்க?

மொதல் பையன் அணில் குமார். ரண்டாவது பையன் சுனில் குமார். மூணாவது பையன் கனில் குமார். கடைசிப் பையம்பேரு எலி குமார்.

என்னது கடைசிப் பையம் பேரு எலியா? சரி இப்ப பிள்ளைகளுக்கு இந்திப் பேர வைக்கறது தான் சினிமா மோகத்திலே நாகரிகமா இருக்கு. சத்தியமா இந்திக்காரன் எவனும் அவம் பிள்ளைங்களுக்கு நம்ம தமிழ்ப் பேர வைக்கமாட்டான். நாம தான் இந்திப் பெயர் மோகத்திலே மயங்கிக் கெடக்கறோம். அது சரி மொத மூணு பசங்களுக்கும் இந்திப் பேர வச்சிட்டு கடைசிப் பையனுக்கு மட்டும் எலி குமார் -ன்னு ஏந் தமிழ்ப் பேர வச்ச?

யோவ் கண்ணய்யா, அது தமிழ் இல்லையா. ஹீப்ரு எலி.

அதென்ன ஹீப்ரு எலி?

ஹீப்ரு இஸ்ரேல் மக்களான யூதர்களோட மொழி. ஏசு கிறிஸ்து பொறக்கறதுக்கு 400 வருஷத்துக்கு முன்னாடி தோன்றிய மொழி அது. ஹீப்ரு மொழில எலி -ங்கற சொல்லுக்குப் புகழ் மிககவன்-ன்னு அர்த்தமய்யா. இந்தி தோன்றி சுமார் 1500 வருஷத்துக்கும் கம்மியாத்தாய்யா இருக்கும்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ#####

அணில்/அனில்= காற்று
சுனில் = செந்தாமரை
கனில் = செயல் திறன
குமார் = மகன்
*******************************
மொழிப் பற்றை வளர்க்க

எழுதியவர் : மலர் (11-Sep-15, 3:52 pm)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே