பனியன் நகரம்

குமாரின் மொத்த இதயத்தையும்
சுமதி சுமந்துகொண்டிருந்தாள்.
இவளின் சுக துக்கத்தை
அவன் அரவணைத்தபடி இருந்தான்.

அன்போ அன்பு,
அளவற்ற அசை,
மங்காமல் ஜொளித்திருந்த நேசம்,
இருவரும் ஒட்டித் திரியவே
எண்ணம் கொண்டிருந்தனர்.

கண்மூடித் தனமாய்
காதலித்தனர்.
இருவேறு சாதிகள் காதல் கொண்டால்,
எமதர்மனைப் போல் உயிரைப் பறிக்க
பாசக் கயிறை பக்குவமாய் போடுவர்
நம் ஊராரும் உறவினரும்.

இவர்களின் காதலைப் பிரிக்கவும்
பாசவலை பின்னினர்.
புத்தியை பயன்படுத்தி,
நழுவி விட்டனர் நம் காதல் புறாக்கள்.

கையில் காசில்லை,
படிப்பும் அரைகுறைதான்.
உயரை காப்பாற்றிக்கொள்ள
ஊரை விட்டு ஓடினர்.

சேர்ந்து வாழ,
பொருளை ஈட்ட,
வசதி பெருக்க,
யோசனை சொன்னான் சோமசுந்தரம்,
குமாரின் ஒரே புத்திசாலி
நண்பன்.

அவன் சொன்னபடி,
துயரம் தீர்க்கும்,
பணக் கஷ்டம் குறைக்கும்,
வந்தாரை வாழவைக்கும்,
பனியன் நகரமாம் திருப்பூருக்கு
சென்றனர்

கட்டிய துணிமணி,
கையில் 500 ரூபாய் .
மனதில் நம்பிக்கை,
திருட்டுக் கல்யாணம் கட்டிக் கொண்ட
புது சம்சாரம்.
இது தவிர வேறொன்றுமில்லை குமாரிடம்.

பஸ் ஸ்டாண்டில் இறங்கி,
மனம் போனபடி நடந்தனர்,
ராயபுரம் வந்தது.

தெருவின் இடமும் வலமும்,
சிறு குறு கம்பெனிகள்.
தட தடவென சத்தமிட்டபடி,
வேலை நடந்து கொண்டிருந்தது.

இது வரை வேலை கேட்டு,
பழக்க இல்லாத குமார்,
பதுங்கிப் பதுங்கி முதல் கம்பெனி
அடைந்தான்.

கேட்டில் ஏதோ ஒரு அட்டை தொங்கிக்
கொண்டிருந்தது.
உற்றுப் பார்த்தால்..வேலைக்கு ஆட்கள்
தேவை என்று எழுதி இருந்தது.

கடவுள் நம் பக்கம் மென்றாள் - சுமதி.
இல்லை இல்லை, எதிர் கம்பெனியை
பாரென்றான் குமார்.
அங்கும் ஒரு அட்டை!
அதே வாசகம்.

அடுத்தடுத்த கம்பெனியை
நோட்டமிட்டனர்,
ஒரே மாதிரி வாசகம் தெருவெங்கிலும்
எழுதப் பட்டிருந்தது.

சந்தோசம் பொங்கிற்று
இருவருக்கும்.

ஒரு மாதிரி முடிவெடுத்து,
குமார் ஒரு கம்பெனிக்கும்,
சுமதி அதே தெருவில் வேறொரு
கம்பெனிக்கும் சென்று பார்க்க
முடிவெடுத்தனர்.

குமாருக்கு பனியன் கை மடிக்கும் வேலை,
சுமதிக்கோ பிசிறு வெட்டும் வேலை.

இருவருமாய் சேர்ந்து வாரம்
இரண்டாயிரம் சம்பளம் பெற்றுக்கொள்ள
சம்மதித்தனர்.

கம்பெனி கணக்காயர் வீடும்
வாடகைக்கு பிடித்துக் கொடுத்தார்.
தெருவே இவர்களுக்கு
ஒத்தாசையாய் இருந்தது.

கடுமையாக உழைத்தனர்.
வேலையும் கற்றுக் கொண்டனர்.
ஆறே மாதத்தில் குமார் மெயின்
ஓவர்லாக் டைலர் ஆனான்.
சுமதியோ சிங்கர் மெஷின்
டைலரானாள்.

நல்ல சம்பளம்.
சந்தோசக் களிப்பில்
திளைத்திருந்தனர்.

ஆறு நாள் வேலை,
ஏழாவது நாள் குதூகலம்.
சினிமாவும்,
கோவிலும்,
கோயம்புதூர் பொருட்காட்சியும்,
பெரிய ஹோட்டலில் விருந்துமென்று
இன்புற்றிருன்தனர்.

ஒரு வருடத்தில்
கருவுற்றாள் சுமதி.
அழகான பெண் குழந்தை.

குமார் கை நிறையா சம்பாதிக்கவே,
குழந்தை நலம் பேண சுமதி
வீட்டிலிருந்தாள்.

இரண்டு வருடத்தில்,
தொழில் கற்றுவிட்டதால்,
நண்பர்களோடு சொந்த
கம்பெனி தொடங்கினான்.

முதல் வருடமே ஒரு ஜெர்மன்
ஆர்டர் கைகொடுக்க,
கொட்டியது பணம்.

புது வீடு,
பெரிய கார்,
வேலையாட்கள் என
சினிமாபோல உயரம் தொட்டான்.

இப்போது மூன்று பெண்
குழந்தைகள்.
ராஜா குமாரிகள் போல நகைகள் பூண்டு,
ஜொலி ஜொலித்தனர்.

ஏழு வருடத்தில்,
அசுர வளர்ச்சி அடைந்தான் -
குமார்.

சுமதிக்கு அளவற்ற
சந்தோஷம்.
தன் கணவனின் நண்பன்
சோமுவை வெகுவாக பாராட்டுவாள்.

மேலும் மேலும் உயரத்திருக்கு
செல்ல குமாருக்கு எல்லா வகையிலும்
துணையாய் இருந்தாள்.

தொழிலை பன் மடங்கு பெருக்க,
குமாரும் பல நாட்கள் இரவு
தாண்டியே வீடடைவான்.

சில நாட்கள் தொழில்
நிமித்தம் அயல் ஊரும் நண்பர்கள் புடை சூழ
சென்றும்விடுவான்.

நண்பர்கள் வட்டம் அதிகமாய்,
ஆதாரமாய் இருந்தனர்.

திருப்பூர்,
வருடத்திருக்கு இருபதாயிரம் கோடி
துணி ஏற்றுமதி செய்கிறது.
2017 இல் இந்த ஏற்றுமதி
நாற்பதாயிரம் கோடிகளாய்
உயரும் என்று சுமதிக்கு
நன்றாக தெரியும்.

ஆனால் தமிழ்நாட்டிலேயே
வருடத்திருக்கு ஆயிரத்து நூறு
கோடி ரூபாயிக்கு மது
குடிப்பவர்கள் திருப்பூரில் மட்டும் தான்
இருக்கிறார்கள் என்றும்.

திருப்பூர் தான் தமிழ்நாட்டிலேயே
மது குடிப்பதில்
முதில் இடம் வகிக்கிறது
என்று பாவம் சுமதிக்கு
தெரியாது!!!

எழுதியவர் : கணேஷ்குமார் பாலு (12-Sep-15, 1:21 am)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 226

மேலே