வயோதிபரும், வாலிபனும்

வயோதிபரும், வாலிபனும்

ஒரு முதியவர் கையில் ஒரு தடியுடனும்,தலையில் ஒரு பெட்டியையும் சுமந்து கொண்டு தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். அவ வழியில் வந்த வாலிபன் பெரியவரைப்ப் பார்த்து " என்ன பெரியவரே அப்படி என்னத்தை சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறீர்கள்" எனக் கேட்டான்.
பெரியவரின் பதில் இப்படி இருந்தது.
" தம்பி, நான் ஒரு கிராமத்தையும், இரண்டு மாவட்டத்தையும் கொண்டு செல்கிறேன் என்றார்.
வாலிபனுக்கு புரியவில்லை
முதியவர் பின்வருமாறு விளக்கினார்.
கையில் உள்ள தடியைக் காட்டி தம்பி இது கை( த்)தடி ஒரு கிராமம். கூறிக்கொண்டே
தலையில் உள்ள பெட்டியை கீழே வைக்கிறார்,அதற்குள் ஒரு கிளியும் நொச்சி இலையும் இருந்தது. அவை இரண்டையும் வாலிபன் கையில் கொடுத்து கிளிநொச்சி மாவட்டம் என்றார்.
வாலிபனுக்கு இப்போது குழப்பம் அதை பெரியவரிடமே கேட்டான்.
பெரியவரே , இரண்டு மாவட்டம் என்றீர்களே இன்னொரு மாவட்டம் எங்கே என்று கொஞ்சம் நக்கலுடன் கேட்டான்.
பெரியவர் பெட்டியைக்காட்டி இதற்குள் என்ன இருக்கு என்று கேட்டார்,
வாலிபன் ஒன்றும் இல்லை என்றான்.
அப்போ பெட்டி காலி, காலியும் ஒரு மாவட்டம் தானே என்று சொல்லி விட்டு பெரியவர் சென்றுவிட்டார்.

@

எழுதியவர் : செல்லக்குட்டி கனகசபாபதி (12-Sep-15, 10:18 am)
பார்வை : 136

மேலே