சத்தம் குமார்

என்னய்யா எப்பப் பாத்தாலும் சத்தம்போட்டு கத்திக் கத்தி யாரையோ கூப்பிட்டிட்டே இருக்கற?

எம் பையனத்தான் கூப்பிடறனுங்க. அவன் அடிக்கடி எங்ககிட்ட சொல்லாமா பசங்ககூட வெளையாட ஓடிப்போறான்.அவனக் கத்திக் கத்தி கூப்பிட்டு எந் தொண்டையே வறண்டு போகுது.

அவம் பேரு என்னய்யா?


அவம் பேரு உத்தம்குமார்.

அந்தப் பேருக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா?

என்னங்க. இந்தக் காலத்திலே எல்லாம் சினிமா தொலைக் காட்சி தொடர் பாத்து அதுல சொல்லற அவுங்களுக்குப் பிடிச்ச இந்திப் பேர அவுங்க பிள்ளைங்ஙளுக்கு வச்சிடறாங்க. அர்த்தம் தெரிஞ்சு யாரும் பேரு வைக்கறதில்லிஙக.

நீ அடிக்கடி சத்தம் போட்டு கத்திட்டு இருக்கற உம் பேரு கருப்பையாங்கறத மாத்தி சத்தம் குமார்-ன்னு வச்சுக்கா.. அழகா இருக்கும்.இல்லனா ஒன்னு செய்யு. நீ கூட கருப்பையா-ங்கற உம பேர அதே அர்த்தத்திலே இந்திப் பேரா மாத்திக்கிற எண்ணம் இருந்தா ஷ்யாம் -ன்னு உம் பேர மாத்திக்க. ஷ்யாம் -ன்னாலும் கருப்பையா -ன்னு தான் அர்த்தம்.
எனக்கும் அது மாதிரி பேர மாத்திக்க ஆசைதானுங்க. ஆனா நம்ம ஊரிலெ இத்தன காலம் எல்லாருக்கும் கருப்பையா -ங்கற பேருல அறியப்பட்ட நான் திடீர்னு எம் பேர ஷ்யாம் -ன்னு மாத்த வெட்கமா இருக்குதுங்க.


=================
உத்தம்=மிகச் சிறந்த
குமார் = மகன், குழந்தை

Shyam: #=Dark
The origin of the name Shyam: (Sanskrit)
#############
மொழிப் பற்றை வளர்க்க. தமிழ் இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் ஒரே செம்மொழி என்பதை உணர்த்த..

எழுதியவர் : மலர் (12-Sep-15, 2:07 pm)
Tanglish : sattham kumar
பார்வை : 90

மேலே