கணேஷ் அல்லது கணேஷ்கர்

அப்பா இப்பெல்லாம் தமிழ்ப் பேரு அல்லது தமிழ்ப்படுத்தப்பட்ட பேரை வச்சுக்கறது நாகரிகம் இல்லப்பா. வட இந்தியாவிலெ பாருங்க பெரும்பாலான பேருங்க ‘ர்’-ல்ல முடியும். அது தான் மரியாதை. டெண்டுல்கன் -ன்னு இருந்தா நல்லா இருக்குமா? டெண்டுல்கர் -ன்னு இருக்கறது தானே மரியாதை. தாத்தா பேரு கணேசன். நீங்க அதே பேர எனக்கும் கணேசன் -ன்னு வச்சிட்டீங்கப்பா. அது நல்லா இல்ல. நான் டெண்டுல்கரோட ரசிகனாகவுமிருக்கறேன். அதனால எம்பேர கணேஷ் இல்லன்னா கணேஷ்கர் -ன்னு மாத்துங்கப்பா.






--------------
பெரும்பாலான தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட விரும்புவதில்லை. மொழிப் பற்றை வளர்க்க இந்தப் பதிவு.

எழுதியவர் : மலர் (15-Sep-15, 11:35 pm)
பார்வை : 82

சிறந்த நகைச்சுவைகள்

மேலே