நாளைக்கு நல்ல நாளு எம் பேர மாத்துங்கப்பா

அப்பா 2001 ஆம் வருஷம் விநாயக சதுர்த்தியன்னைக்கு நா பொறந்தேன்னு எனக்கு விநாயகன் -ன்னு பேரு வச்சதா சொன்னீங்க. இந்த 21 ஆம் நூற்றாண்டிலே பெத்தவங்க எல்லாம் அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களத் தான் வைக்கறாங்க. எங்க தமிழாசிரியர் " விநாயகம் என்ற பேரு விநாயக் என்று தமிழ்ப்படுத்தப்பட்ட இந்திப் பேரு"ன்னு சொன்னாரு. என்னோட வகுப்பில என்னத் தவிர எல்லாப் பசங்க பேரும் சுத்தமான இந்திப் பேருங்க. அப்பா , அப்பா நாளைக்கு விநாயக சதுர்த்தி. ரொம்ப நல்ல நாளு. விநாயகன்-ற என்கிற எம் பேர மாத்தி சுத்தமான இந்திப் பேரா விநாயக் -ன்னு எம் பேர மாத்திடுங்கப்பா.
-------------
மொழிப் பற்றை வளர்க்க

எழுதியவர் : மலர் (16-Sep-15, 2:46 pm)
பார்வை : 116

மேலே