வெளிநாடுகளில் ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவோருக்கு என்ன தண்டனை

வெளிநாடுகளில் ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவோருக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

1. ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

2. எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

3. அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறுவேலை தரமாட்டார்கள்.

4. செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

5.நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

6. இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

7. சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெலலாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : தமிழ் ச (20-Sep-15, 9:27 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 290

மேலே