ஆட்டுக்கறியில அடிச்சிக்குவானுக கோழிக்கறியில கூடிக்குவானுக

இன்றைய கிராமங்கள் அன்றைய வெள்ளந்தி மனிதர்கள் வாழ்ந்த கிராமங்கள் போல இல்லை.

அன்று கூட சாதிகள் இருந்தது. சாதிக்கலவரங்ககள் இல்லை. வேற்று மனிதர்களுக்கு கிராமங்களில் இடம் இருந்தது. அவர்களை வேறாகப் பார்க்கத் தெரியாத இயல்பான பண்பு இருந்தது. சண்டைகள், சச்சரவுகள், மனஸ்தாபங்கள் இருந்தது. ஆனால் அவை வன்மம், குரோதமாக நீடித்து கொலைகளில் முடிந்ததில்லை.

அப்படிப்பட்ட கிராம மக்களிடையே புழங்கிய சொலவடையாகத்தான் இது.

".....ஆட்டுக்கறியில அடிச்சிக்குவானுக. கோழிக்கறியில கூடிக்குவானுக......"

என்னமாதி பயபிள்ளைக......!

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஞானசேகர (2-Oct-15, 12:22 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 130

மேலே