விக்கிப்பீடியா பற்றி தெரிந்துகொள்வோம்

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது.

அனைத்து மனித அறிவும் இலவசமாக, மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாக சேர்த்து 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

தற்போது 200-க்கும் மேற்பட்ட மொழி பதிப்புக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில் தொடர்ச்சியான அப்டேட்டுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. 14-க்கும் மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை வரையிலான எண்ணிக்கையை தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.

இந்த பக்கத்தில் எவரும் எழுதலாம் என்பதே விக்கிப்பீடியாவின் சுலோகமாகும். தகவல் சரிபார்க்கும் வண்ணம் ஆதாரங்கள் தந்து, நடுநிலைமையுடன் எழுத வேண்டும் என்பது விக்கிப்பீடியாவின் கொள்கை. விக்கிப்பீடியாக் கட்டுரைகள் யாவும் பதிப்புரிமை கைவிடப்பட பதிப்புரிமை மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இங்கு அனைத்து உள்ளடக்கங்களையும் யாரும் இலவசமாக பயன்படுத்தலாம்.

இந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 தேதியில் ஆரம்பமானது. தற்போது இதில் 55,870 கட்டுரைகள் உள்ளன. 56,211 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எழுதியவர் : செல்வமணி - இணையம் L கார்த்த (6-Oct-15, 10:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே