காதல் மந்தகாசம் - 2

" காதலுக்கு
பார்வை விதை, பேச்சு உரம்,
ஸ்பரிசம் பச்சையம்,
நம்பிக்கை பூ, தியாகம் காய்,
வெற்றி பழுப்பது, தோல்வியோ அழு(கு)வது..."
- என்று நான் உணர்ந்திருக்கிறேன்.

மெல்ல மெல்ல அந்த மெழுகு பார்வையை அசை போட்டபடி வீடு திரும்பினேன்.
வீட்டுக்குள் நுழைந்ததும் படிக்க ஆரம்பித்தேன்.

புத்தகம் என் கைகளில், புத்தியில் ஏதோ ஒரு ஓடையின் சத்தம் சற்று தூரத்தில்...
மருகினேன். என்ன இது.?
மீண்டும் படிக்க எத்தனித்தேன்.
சில நிமிடங்கள்... சட்டென்று ஒரு சத்தம், என் அறையின் ஒரு மூலையில் இருந்து ஒரு பூனை தாவி தள்ளி சென்று திரும்பி என்னைப்பார்க்க,
அந்த பார்வையில் மஞ்சள் கோலங்களுடன் மச்சங்கள், மயிர் கற்றைகள்...
கவனம் சிதறியது..

என்னை நானே செல்லமாக தட்டிக்கொண்டு மீண்டும் படிக்க தொடங்கினேன்..

இன்னும் சில நிமிடம் ..

மீண்டும் ஒரு மௌனத்தால் கவரப்பட்டு, என்ன ஒரு சத்தமும் இல்லையே, என்று ஏதோ ஒன்றுக்காக என் கவனம் சிதற...

புத்தகம் கை நழுவ: " சரி கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து படிக்கலாம்" என் முடிவு செய்து, படிக்கையில் சாய்ந்தேன்.

சில நிமிடங்கள்..
தூங்கியவண்ணம் ஒரு நினைவு, ஒரு சலனம், அப்படியே ....
தூங்கி விட்டேன்.

*************************

மாலை நேரம்..
மஞ்சள் வெயிலின் மென்மையான தாக்கத்தில்
என் நண்பனுடன் மீண்டும் சந்திப்பு.

" என்னடா, நல்ல படிச்சியா?"
" எங்கே படிச்சேன், தூங்கினேன் ."
" சரி நல்லா தூங்கினையா?"
" ஏண்டா கேட்குறே?"
" என்னமோ அடுத்த வாரம் பரிட்சைன்னு சொன்னியே,
படிக்காம பொழுது போச்சு, நைட்டாவது படிக்க முடியுமில்லெ?"
" தெரியலடா, என்னமோ அடிக்கடி டிஸ்டர்ப் ஆகுதுடா"
" ஆகும்டா ஆகும், என்னாச்சு உனக்கு?"
" சரி எத்தன மணிக்கு காலைல போன பஸ் வரும்?"
" 6 மணிக்கு டா, நீ பாக்கணுமா?"
" யாரை?"
" காலைல உன்ன ஒரு ஒட்டு ஓட்டுனாலே, அவள சொன்னேன்?"
" டே என்னடா இது சைட் அடிக்கறது தப்பா?"
" சைட் அடிக்கறது தப்பில்லே, சைடு வாங்கறது தான் தப்பு."
" என்ன சொன்னே?"
" நான் ஒன்னும் சொல்லலே, தோ, பஸ் வருது, நீ பாரு, நான் உனக்கு டீ வாங்கிட்டு வர்றேன்.."-ன்னு சொல்லிட்டு என் நண்பன் அந்த பக்கம் போனான்.

எதிர்த்திசையில் பஸ் வந்தது, அந்த ஸ்டாப்பில் சிலர் இறங்க..
நான் ஜன்னலில் தேட, அவளும் என்னை தேடுவது போல் தெரிந்தது..
அவளுக்கருகில் அமர்ந்து இருந்த தோழிகள் சிலர் என்னை திரும்பி
பார்ப்பதுவும் புன்னகைப்பதுமாகவும் இருக்க பஸ் கிளம்பி சென்றது..

எனக்குள் ஒரு திருப்தி.
கையில் டீ டம்ளருடன் நண்பன் வந்தான்.
" என்னடா பஸ் போயிடுச்சா? தரிசனம் கிடைச்சுதா?..."
"........ம்.ம். கிடச்சுது ."
" இந்த டீ சாப்பிடு, "

டீ சாப்பிட்டோம்.
மற்ற விஷயங்களில் பேச்சு திரும்ப சிறிது நேரம் கடந்தது.

சலீம், இன்னொரு நண்பன் வந்தான்.
" டே என்னடா, ஊரிலிருந்து வந்துட்டு பாக்கவே முடியல?"
" இல்லடா, பரீட்சை நெருங்குதில்ல, அதான் இத்தன நாளா வெளியில வரல"

" இனி அடிகடி வெளியில வருவாண்டா" - கடை நண்பன் சொன்னான்.
" ஏன் அப்படி சொல்றே?" - சலீம்.
என்ன நடந்துச்சுன்னு அவன் சொல்ல, சலீம் முகத்தில ஒரு சந்தோஷம்...
" கடைசீல நம்ம வழிக்கு வந்துட்டேயே.."
" என்னாது உன் வழியா?"
" அது உனக்கு தெரியாதா, அவனும் ஒரு ஆளப்புடிச்சுட்டாண்டா?"
" ரைட், ரைட்.. அப்படித்தான் இருக்கணும்.."
மூவரும் சிரிக்க...

" சரி நான் கிளம்பறேன்..வீட்டுக்கு." என்றேன்.
உடனே சலீம், " டே, இருடா நம்மாளு வரும் பாக்கலாம்."
" அப்படியா?"
கடை நண்பன், " ஆமாடா, டெய்லி இந்த நேரம் தான் அவன் ஆளு கிராஸ்
பண்ணும். கொஞ்சம் வெயிட் பண்ணு, பாக்கலாம்.."

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (7-Oct-15, 1:35 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 155

மேலே