ஒரு கணத்தில் பிறந்து ஒரு கணத்தில் முடியும் வாழ்க்கை - உதயா

பருவத்தில் துளிர்விடும் பூக்கள் , இனம் புரியாத உணர்வுகள் , மொழியில்ல பாஷை , தீராத தாகம் சாதாரண பெண்களுக்கும் உரித்தான கனவுகள் அதில் சில கனவுகள் வசந்தகாலங்கள் சில கனவு இளவேனிக்காலங்கள்,சுய நினைவு மறந்த சில மாதங்கள் அதை நினைத்து வாழ்ந்த பல வருடங்கள் எல்லாம் கனவுகளின் ஓடத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்க பயணித்துக்கொண்டிருந்தது மனம் பிணைந்து கரம் பிடித்த கண்ணன் - கருவாச்சியின் வாழ்வு

நடுத்தர குடும்பம் என்றாலும் பிள்ளைகளின் படிப்பு செலவு , மின் கட்டண செலவு , வீட்டு வாடகை செலவு, தீபாவளி செலவு, பொங்கல் செலவு , உறவினர்களின் சில விழா செலவு இதற்கிடையில் கொஞ்சம் சேமிப்போடு நிறைவான வாழ்வு , குறையில்லா மகிழ்வு என எல்லா தினங்களும் விடியலில் சிறு புலம்பலோடு பிறந்து மதிய நேரங்கல்கள் காத்திருப்பில் கழிந்து அந்தி நேரம் ஆவலோடும் இரவுநேரம் நிம்மதியான உணவினை பிள்ளைகளின் குறும்புகளில் கலந்து மௌனப் புன்னகையில் மென்று உண்டவாறே வாழ்ந்துக்கொண்டிருந்தனர்.

திருமணமாகி சுமார் பத்து வருடங்கள் முடிவடைந்தின . ஆனால் அவர்கள் என்றுமே புதுதம்பதியினர்தான்.கண்ணன் கருவாச்சி மீது அளவுகடந்த அன்பினை வைத்திருனான் . கருவாச்சியோ கண்ணன் தான் தன் உயிர் என்று நித்தமும் நினைத்து நினைத்து நித்திரையில் கூட அவனுடனே கானல் தேசம் பறந்து வாழ்ந்திருந்தாள்

கண்ணன் தேயிலை தோட்டத்தின் கணக்குகளை கண்கானிக்கு வேளையில் உள்ளவன். வரவு செலவு கணக்குகளையும் அவன்தான் மாதம் முழுவதும் கண்காணிப்பான். கண்ணனின் முதலாளி மாதம் ஒருமுறை கணக்குகளை சரிபார்பார் . எப்போதும் நேர்மை நியாயம் என்று நல் குணத்துடனே இருப்பதால் சில பணியாளர்களுக்கு கண்ணன் மீது கொஞ்சம் வஞ்சம் கொண்டிருந்தனர் . காரணம் அவன் அவர்கள் செய்யும் சில துரோக செயல்களை முதலாளியின் செவிகளுக்கு எட்டச் செய்வதால்

ஒருநாள் அந்த பணியாளர்கள் கொஞ்சம் தேயிலையை மறைமுக திருடியதை கண்ணன் பாத்துவிட்டு முதலாளியிடம் சொல்லி தக்க தண்டனையை வாங்கி கொடுத்துவிட வஞ்சம் சற்று வலுவடைந்தது .
அந்த பணியாளர்கள் பழிவாங்க முடிவு செய்து கண்ணனின் பொறுப்பில் இருந்த பணத்தினை திருடி பழியினை கண்ணன் மீதே போட்டுவிட்டனர். முதலாளி உண்மையை அறியாமல் கண்ணனை பணியில் இருந்து நீக்கிவிட்டனர் . கண்ணன் எவ்வளவோ சொல்லியும் முதாளியின் செவி சாய்வதாய் தெரியவில்லை.

மன வருத்ததோடும் கொஞ்சம் கோவத்தோடும் கண்ணன் வீடு திரும்பினான். ஆசையாய் காத்திருந்த மனைவி கண்ணன் வருவதை பார்த்து " மாமா , மாமா "என்று அழைத்துக் கொண்டே சிறுபிள்ளைபோல் ஓடிவந்தாள் . வருத்தத்தில் இருந்த கண்ணன் அவளை காணாதது போல் அவளை கடந்து தன் அறைக்கு சென்றான் .

கருவாச்சி கண்ணனிடம் சென்று " ஏன் மாமா என்ன ஆச்சி எதுக்கு இப்படி சோர்ந்து போய் உக்காந்துனு இருக்க " என கேட்டதும் " மனிசன கொஞ்சம் நிம்மதியாவே விடமாட்டியாடி , எதுக்கு தொல்ல பண்ணினே இருக்க " என ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட்டான்

கண்ணன் தான் தனக்கு உயிர் , உலகம் , கடவுள் ,எல்லாமே என நினைத்து வாழ்ந்திருந்த கருவாச்சியால் அவ்வளவு பெரிய சொற்களை தாங்க முடியவில்லை, அவள் மனம் நொறுங்கிய கண்ணாடியானது .
எண்ணம் மாட்டும் தெளிந்த நீரோடைப்போல மரணத்தின் கதவை தட்ட எண்ணியது

எதை எதையோ நினைத்தவாறே உவர் நீரில் நனைந்தவாறே உறங்கிய அவள் மறுநாள் ஊருக்குள் செய்தியாகி இருந்தாள் மாய்ந்து போனாள் என்று. " அம்மா அம்மா "என கதறும் குழந்தைகள் . கருவாச்சிமீது அளவற்ற அன்பு கொண்ட கண்ணனோ " அய்யோ என்ன விட்டு போக உனக்கு எப்படி டி மனசு வந்தது , கருவாச்சி இங்க பாரு, மாமாவ பாருடி , மாமா உனக்கு எதனா சின்ன காயம்னா கூட செத்து போய்டுவ, நீ அழுதா தாங்கவே மாட்டனு சொல்லுவியே டி , இங்க பாருடி உன் மாமா அழுற டி , சொல்லு கருவாச்சி மாமா அழாதனு சொல்லு , " என துடிக்கிறான் கண்ணன்

கருவாச்சியை தன் மடிமீது படுக்க வைத்து கொண்டு " செல்லம் இங்க பாருடி , என்ன டி மாமா உன்ன திட்டிடேனா டி , மாமா ஏதோ கோவத்துல பேசிட்ட , இனிமே அப்படி பண்ண மாட்ட இங்க பாருடி என்ன பாரு " என அவன் தன்னிலை மறந்து துடி துடித்து கதறுகிறான் . அவள் பிரிவை தாங்காத கண்ணன் கருவாச்சியின் பிணத்தை கட்டி அணைத்தவாறே தானும் பிணமாகிறான்.

விவரம் தெரியா பிள்ளை மூன்றும் அனாதையாகிறார்கள் .இதுவரை தென்றல் வீசிய முகத்தில் பசியின் ஏக்கமும் தாக்கமும் தொற்றிக்கொள்கிறது . மறுநாள் காலை தொலைபேசி சத்தம் கேட்டு கருவாச்சியின் உறக்கம் கலைகிறது . தொலைபேசியில் கண்ணனின் முதலாளி கண்ணனிடம் மன்னிப்பு கேட்கிறார். சக பணியாளர்கள் நிகழ்ந்ததை விளக்கி சொல்லிவிட்டனர் என காரணம் சொல்லிக்கொண்டே . அதனுடன் கண்ணனை வேலைக்கு வரும்படியும் சொல்லியிருந்தார் .

கண்ணன் தொலைபேசியை அனைத்து வைத்துவிட்டு சமையல் அறையில் கண்ணீருடன் உணவினை சமைத்துக் கொண்டிருந்த கருவாச்சியை கட்டி அனைத்துக் கொண்டான் . கருவாச்சியும் இரவு கண்ட கனவினை கண்ணனிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தாள் .

அவள் சொல்லி முடித்ததும் கண்ணன் அவளை இறுக கட்டி பிடித்துகொண்டு " என்னடி என்ன விட்டு செத்து போலான்னு நினைச்சியா , உன்ன கோலபண்ணிடுவ டி , என்ன அனாதையா விட்டு எங்க டி போவ " என அழுக , " மாமா நானு எங்கவும் போக மாட்ட உங்கூடவேதான் இருப்பன் அழாத " என அவள் அழுதுகொண்டே சமாதானம்படுத்தினாள்.

***முற்று***

எழுதியவர் : உதயா (7-Oct-15, 2:17 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 256

மேலே