ராசலீலை

புனலோரம் சூழ்ந்து நின்று புன்சிரிக்கும் வண்ணப்பூக்கள்
கோரைப் புற்களுடன் இரவுத்தென்றலில் சாய்ந்தாடும்
பளிங்கு புனல் நடுவே பூரண நிலவு கண்ணன் முகம் காட்டும்
மரங்களில் இளந்தென்றல் ஊதும் குழல் கேட்கும்
இலைகள் சரி நிகர் சந்தம் கோலாட்ட முரசொலிக்கும்
உற்று நோக்கின் , கண்ணனை சுற்றி கோபியர் ராசலீலை காண் !
அண்ணாந்து நோக்கின் , கார்நீல மேனியில் பௌர்ணமி முகம்
சுற்றி கோலமிடும் மின்மினி கோபியருடன் ராசலீலை காண் !

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (9-Oct-15, 12:02 pm)
பார்வை : 133

மேலே