கைநாட்டுப் போட்டி

வாங்க வாங்க ..என்ன எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க ...
என்ன விசயம் ?
இப்பிடி தலைய சொறிஞ்சுக்கிட்டு நின்னா ....?

வயசுல சின்னவன் நீ சொல்லுடா ...அண்ணாச்சி எவ்வளவு அன்ப கேக்குது

போட்டி நடத்தனுமுங்க ....

போட்டியா ...ரேக்ளா ரேசா ஜல்லிக் கட்டா ...? நம்ம ஊர்லயா நடத்திட்டா
போச்சு

அதெல்லாம் வேண்டாமுங்க ....
மாடும் சாவுது மனுசனும் சாவுதான் ....ஒழைக்கற மாட்ட இப்பிடி கொழுக்க
கொழுக்க விருதாவா வளத்து போட்டி கீட்டின்னு துன்பப் படுத்தலாமா ?
காந்தி மகானின் அகிம்சையால்தான் இந்த நாட்டுக்கே சொதந்திரம்
கிடைச்சுது . வாயில்லா சீவனை இம்சை படுத்தலாமா ?

என்ன அருமையான சிந்தனை .ஆமா சுத்தி சுத்தி என்ன சொல்ல வரீங்க
ஓட்டப் பந்தயம் நடத்தனுமா ?

ஐயோ அதெல்லாம் வேணாமுங்க ..நாங்கெல்லாம் வயசாளிங்க இவன்தான்
சின்ன வயசு .ஆனா வவுத்த வலிக்காரன் . ஓடறப்போ வயித்துல வலி
வந்துச்சுன்னா டக்குனு அங்கனையே நின்னுபுடுவான் ..போட்டியில செயிக்க
மாட்டான் அப்பறம் இந்த ஊர்ல ஒரு புள்ள இவன கட்டாது .
அது கெடக்கட்டும் ....ஆமா மடியில ஒரு பெட்டிய வச்சுக்கிட்டு டக்கு டக்குன்னு
தட்டிகிட்டு இருக்கீங்களே ...என்னது

அதுவா மடிக் கம்பூட்டரு

சேர் மார்கட்டுல விளையாடுதீங்களோ ?

சே சே அதெல்லாம் இல்லீங்க கவித போடுதேன்

நெனச்சேன் ...வானத்த பாக்கீங்க பெட்டிய பாக்கீங்க ...தட்டுதீங்க பின்ன யேன் ஊகம் சரிதான் ..சரியான இடத்துக்குத்தான் நாங்க வந்திருக்கோம் .
-------தொடரும்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (10-Oct-15, 10:31 am)
பார்வை : 77

மேலே