பூஜை - பெண்களின் பார்வையில்

பூஜை --- பெண்கள் பார்வையில் .. கட்டுரை
----------------------------------------------------------------

பூஜை என்ற சொல்லே உடம்பில் ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்குகிறது!...

பூஜை என்றாலே அது நாம் நம்மை மீறிய சக்திக்கு கொடுக்கும் காணிக்கை ஆகும்...என்னுடைய எண்ணப்படி, பூஜை என்பதன் பொருள் கடமை / சேவை என்பதை குறிப்பதாகும் ....பெரும்பாலும் இது பெண்களுக்கு பொருந்தும்.....

பெண்களாகிய நாம், அதுவும் அலுவலக வேலைக்கு செல்பவராயின் நம் மனதில் " அடடா! நம்மால் தினமும் நிறைய ஸ்லோகங்கள் சொல்ல முடியவில்லையே! பூஜை நன்றாக செய்ய முடியவில்லையே! " என்றெல்லாம் சற்றும் கவலை பட தேவை இல்லை.. அவசியமும் இல்லை!...

உங்கள் பூஜை அறை அல்லது அலமாரியில், ஒரு சிறிய அழகு கோலம் போட்டு விளக்கை ஏற்றி வைத்து அதன் அழகை பாருங்கள்....!!கடவுளின் தோற்றம் அதில் தெரியும்... நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா என்று தெரிய வில்லை, என் அம்மா சொல்லி இருக்கிறாள், "மார்கழி மாதத்தில், காலை எழுந்தவுடன், கை கால்களை அலம்பிக்கொண்டு முதலில் விளக்கை ஏற்றவேண்டும்!" என்று... மனதிற்கு அப்படி ஒரு நிறைவை கொடுக்கும்... நான், மார்கழி மாதம் என்று இல்லை தினசரியே இதைதான் செய்கிறேன்... உண்மையை கூறுகிறேன் அந்த விளக்கு ஏற்றியதும் என் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும் பாருங்கள் அதை வெறும் வார்த்தைகளால் கூற இயலாது.

பூஜை செய்வது என்றால், அதற்காக மணிக்கணக்கில்தான் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்றும் வேதங்கள், மந்திரங்கள் அனைத்தையும் சொல்லித்தான் பூஜை செய்யவேண்டும் என்பதும் இல்லை... இதற்காக நான் வேதங்கள் மீதோ அல்லது மந்திரதிலோ நம்பிக்கை இல்லாதவள் என்ற முடிவிற்கு வரவேண்டாம்.. நான் வேதங்கள் கற்ற குடும்பத்தில் பிறந்து ஆச்சார அனுஷ்டானங்களை நன்கு பழகி அறிந்தவள்...நான், வேதங்களுக்கோ, மந்திரங்களுக்கோ எதிரி அல்ல... நான் சொல்ல வருவது ......

பெண் என்பவள் தன குடும்ப பொறுப்புகளை திறம்பட செய்து முடிபதன் மூலமாகவும் , வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், குழந்தைகள் தேவையை பூர்த்தி செய்வதன் மூலமும் நூறு பூஜைகள் செய்த பலனை அடைகிறாள்... இது கட்டாயம் உண்மை.

நம் வேலைகள், கடமைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு நான் பூஜை மட்டும் செய்வேன் என்று சொல்வதால் எந்த பலனும் இல்லை அதற்கு அவசியமும் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்....இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல.... தன வேலைகள் மற்றும் குடும்ப பொறுப்பில் உள்ளவர்கள் தன்னால் பூஜைக்காக நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லையே என்ற மன வருத்தமோ , கவலையோ தேவை இல்லை என்பதுதான் என் பதிவு....

கடவுளின் சக்தி நமை என்றும் காக்கும்....

அன்புடன்

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி. மைதிலி ராம்ஜி (10-Oct-15, 11:20 am)
பார்வை : 97

மேலே