டாஸ்மாக் ரசிகன்

ஏண்டா நீ ஆட்டோ ஓட்டி நல்லா சம்பாதிச்சிட்டு இருந்த. அந்த பாழாய்ப் போன குடியினாலெ வீணாப் போன. எப்படியோ திருந்தி ”இனிமே குடிக்ககுடிக்கமாட்டேன்”ன்னு உன் மனைவிக்கு சத்தியம் பண்ணிக்குடுத்தே. அதிலெ இருந்து நீ இதுவரை குடிக்காம சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கிற. உன்னப் பாராட்டறேன். ஆனா தினம் சாய்ந்திரம் 7.00 மணி ஆனா டாஸ்மாக் கடைக்குப் பக்கத்திலெ ஆட்டோவை நிறுத்திட்டு வந்து டாஸ்மாக் முன்னாடி நின்னு பாத்துட்டு நிக்கறயே எதுக்குடா?

டேய் நா பலவருசம் டாஸ்மாக்னாலே காசை போதையாக்கி வீணாப்போனவன். பல நாள் பழக்கத்தை கைவிட்டாலும். பழைய காட்சிகளை மறக்கமுடியல. அதனால தெனம் சாய்ந்தரம் 7 மணிக்கு இங்க வந்து டாஸ்மாக்ல குடிக்கறவங்களப் பாத்து ரசிக்கிறேண்டா.

ஓ..... அப்பிடி போடு அருவாளை. குடிக்காரனா இருந்தவன் திருந்தி டாஸ்மாக் ரசிகன் ஆகிட்டே. சரி ரசிக்கறதோட நிறுத்து.

எழுதியவர் : மலர் (11-Oct-15, 10:24 pm)
Tanglish : taasmaac rasigan
பார்வை : 250

மேலே