மனித ஆலமரம்

என்ன தம்பி உம் பேரனுக்கு மனித ஆலமரம் -ன்னு பேரு வச்சிருக்கிறீங்க?

இல்லண்ணே எம் பேரன் பேரு மனவ் அஷ்வத் -தான் அண்ணே.

சரி அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்ன்னாவ்து தெரியுமா?

தெரியாதண்ணே. எம் மகன் புது தில்லில்ல படிச்சவன். அவனுக்கு இந்தி நல்லாத் தெரியும். உச்சரிக்கப் பிடிச்சிருக்கேன்னு தன் மகனுக்கு அந்தப் பேர வச்சுட்டான். அவனுக்கும் அந்தப் பேருக்கான அர்த்தம் தெரியாது.

உம் பேரன் பேருள்ள இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டுமே சமஸ்கிருதச் சொற்கள். மனவ் -ன்னா மனிதன். அஷ்வத் - ன்னா ஆலமரம். தம்பி நா பணி ஓய்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி சமஸ்கிருத ஆசிரியர்னு உங்களுக்கே தெரியும். மனவ்-ங்கற சொல் துருக்கிய மொழியிலும் இருக்கு. அதுக்கு பழம் அல்லது காய்கறி விற்பவர்ன்னு அர்த்தம்.


ரொம்ப நன்றி அண்ணே..




+++++++++
சிரிக்க அல்ல. பிறமொழிப் பெயர் அறிய. நம்பாதவர்கள் கூகுலில் தேடிப்பார்க்கவும்.

எழுதியவர் : மலர் (14-Oct-15, 7:57 pm)
பார்வை : 220

மேலே