வெள்ளம்

" வெள்ளம் "

தென்னம் பாளை தின்னுது துள்ளும் வாளை
மின்னும் பூவை அள்ளுது செத்த காளை

மிதக்குது துகில்கள் அணைக்குது பிணங்கள்
திகைக்குது விழிகள் உதைக்குது இமைகள்

பதைக்குது நெஞ்சம் சிதையுது தஞ்சம் - இயற்கை
விதைத்ததோ வஞ்சம் கதைப்பதோ மிஞ்சும்

பாடி ஆடும் கள்ள வெள்ளம்
கோடி சூடும் கொள்ளை அழகு

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (15-Oct-15, 2:47 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : vellam
பார்வை : 194

மேலே