முட்டாள் தனம்

ஒரு வருடம் பிறக்கும் முதல் மணி, முதல் நாளில்,
நல்ல செல்வந்தர் கையாலே கைவிசேஷம்
வாங்குவது நம் மக்களிடையே ஒரு கலாச்சாரம்

அப்படி ஒரு வருட பிறப்பு நாளில் வசதி உள்ள நல்ல மனம் உள்ள
மனிதனிடம் கைவிசேஷம் வாங்க தெரிந்த குடும்பத்தை சேர்ந்த
வறுமைக் கோட்டுக்குள்ளே வாழும் ஏழைத் தாய் ஒருவர்
கைவிசேஷம் வாங்க சென்றுள்ளார் ,
அவள் நினைத்ததைப் போல் பணக்கார அம்மாவிடம்
காசை கைவிசேஷமாகப் பெற்றுக் கொண்டு மன மகிழ்வோடு
வீட்டுக்கு சென்றார்

அடுத்தநாள் தன் கை செலவுக்கு பணம் தேவை பட்டதால்
அந்த கைவிசேஷக் காசை எடுத்துக் கொண்டு பொருள் வாங்க கடைக்கு சென்று
கடைக்காரனிடம் காசைக் கொடுத்தபோது தான் அது செல்லாக் காசு எனத் தெரிந்தது
அவள் மிகுந்த கவலையுடன் வீடு திரும்பி வந்து மனம் நொந்து அழுதாள்
தன் வறுமையில் இருந்து கொஞ்சம் முன்னேற்றம் வரும் என நினைத்து
கைவிசேஷம் வாங்கியதால் திருப்தியுடன் இருந்தவளுக்கு
இது பலத்த ஏமாற்றமும் கவலையும் கொடுத்தது
இந்த வகையில் ஏழைகளும் இருக்கிறார்கள்
இப்படி ஏமாற்றும் ஒரு சிலரும் இருக்கிறார்கள் .
ஏழையின் மேல் இரக்கம் கொள்வோர் பாக்கியவான்கள்
இதை உணராத நெஞ்சங்களும், பணச் செருக்குடன் வாழ்வோரும்
இவுலகில் தான் வாழ்கிறார்கள் ,

ஏழைகள் எப்படி முன்னேறுவோம் என்று நினைக்கலாம் ,
உழைக்கலாம், முயற்சிகள் செய்யலாம். ஆனால்
இப்படியாக மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தால்
இதுதான் முடிவு , முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்
நம்மாலும் எதுவும் முடியும் என்று நினைத்து விட்டால்
இத்தகைய முட்டாள் தனம் வேண்டியதில்லை
இது கேள்விப் பட்ட உண்மை கதை
கடவுள் அன்றி கருணை காட்ட எவரும் இல்லை
அவனை நம்புங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

எழுதியவர் : பாத்திமா மலர் (15-Oct-15, 11:16 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : muttal thanam
பார்வை : 307

மேலே