இன்று சேமிப்பு தினம்

நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில் கூட கையில் கிடைக்கும் சொற்ப பணத்தையும் தேவையின்றி செலவழிக்க தற்போது ஏராளமான வழிகள் உள்ளன, இதற்கு காரணம் சேமிப்பு பழக்கத்தை பற்றி ஆசிரியர்களும், பெற்றோர்களும், இளைய தலைமுறைக்கு சேமிப்பை பற்றி சொல்லி தராததே,

தற்போதைய கால கட்டத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை பணம் தேவை படுகிறது,

சேமிப்பு என்பது பணம் மட்டுமல்லாமல், தண்ணீர், மின்சாரம், போன்றவையும் அடங்கும்,

தண்ணீர் " பூமியில் இருக்கும் 100 சதவிகித தண்ணீரில் 3 சதவித தண்ணீர் மட்டுமே நன்னீர், ஆனால் இதில் 0.3 சதவீத தண்ணீரே இப்பூமியில் வாழும் வாழப்போகும் உயிர்களுக்கு அதிகமானது

மின்சாரம் " மின்சாரம் தயாரிக்கும் ஒரு காற்றாடியை செய்ய 100 ல் இருந்து ஆயிரம் கோடி செலவாகிறது, இதற்கு சூரிய சக்தி மின் உற்பத்தி மிகவும் குறைந்த செலவே ஆகிறது,

உணவு பின் தங்கிய நாடுகளில் ஒரு வேலை உணவுக்கு வழியில்லாமல் ஒரு வருடத்திற்கு இரண்டரை கோடி மக்கள் பசியால் செத்து மடிகின்றனர், ஆனால் வளர்ந்த நாடுகளில் வாழும் மக்களால் ஒரு வருடத்திற்கு 5 கோடி மக்கள் அருந்தும் உணவு வீரனாக குப்பையில் கொட்டப் படுகிறது,

இத்தனைக்கும் காரணம் வளரும் தலைமுறைக்கு படிப்பைத் தவிர வேறு எந்த ஒரு நல்லதையும் கற்றுத் தராததே

30,10, லாவது, பணம், தண்ணீர், மின்சாரம், உணவு போன்றவற்றை வீணாக்காமல் இருப்பதற்கும், சேமிப்பதற்கும் சொல்லி தாருங்கள்

எழுதியவர் : விக்னேஷ் (31-Oct-15, 4:22 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 1258

மேலே