கற்பனை இங்க வாம்மா

கற்பனை இங்க வாம்மா.

யாரைடா கற்பனை-ன்னு கூப்பிடற?

எம் பொண்ணத்தாங் கூப்பிடறேன்.

ஏண்டா பைத்தியகாரத்தனமா நீ பெத்த பொண்ணுக்கு கற்பனைன்னா பேரு வைக்கிறது?

அட இந்தி வெறி பிடிச்சவனே உம் பொண்ணு பேரு என்னடா?

எம் பொண்ணுப் பேரு அழகான இந்திப் பேருடா. அவ பேரு கல்பனா.

அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியுமா?


அதெல்லாம் யாருக்குத் தெரியும்


அடப்பாவி! அர்த்தம் தெரியாத பேரை உம் பொண்ணுக்கு வச்சுட்டு எம் பொண்ணுக்கு அர்த்தம் தெரிஞ்ச தமிழப் பேர வச்சது உனக்குத் தப்பா தெரியுதா?

தம்பி அறிவுடையப்பா நாம கற்பனை-ன்னு சொல்லறத் தான் இந்திக்காரங்க கல்பனாங்கறாங்க. இந்தச் சொல் தமிழிலே இருந்து வட மொழிக்குப் போன சொல்லா இருக்கும்.

அப்பிடியா. உனக்கிருக்கற தமிழ்ப் பற்று எனக்கில்லடா. எல்லாம் சினிமா மோகத்திலே எந் தாய் மொழிப் பற்றே ஏறக்குறைய அழிஞ்சு போச்சுடா.




#######????சிரிக்க அல்ல.
சிந்திக்க
மொழிப் பற்றை வளர்க்க
பிற மொழிப் பெயரின் பொருள் அறிய

எழுதியவர் : மலர் (1-Nov-15, 10:19 am)
பார்வை : 140

மேலே