கஞ்சன் வீட்டில் விருந்து

ஒரு ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் முழு கஞ்சன். தப்பித்தவறியும் அவனிடமிருந்து ஒரு சல்லிபைசா வாங்க முடியாது. பண விஷயத்தில் அவன் அவ்வளவு கெட்டி. பகிர்வது என்ற குணமே கிடையாது. நண்பர்கள் விருந்து கேட்டாலும் கொடுக்க மாட்டான் அந்த மகா கஞ்சப் பிரபு.

ஒரு சமயம் தன் நண்பர்களுக்கு விருந்தளிப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்காரன் கஞ்சப் பிரபுவின் வீட்டை வாடகைக்குக் கேட்டான். வாடகை கிடைக்கும் போது முடியாது என்று மறுப்பானேன் என்று கஞ்சப் பிரவு தன்வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு விருந்து உபசார நிகழ்ச்சிக்காகக் கொடுத்தான்.

கஞ்சப் பிரவுவின் வீட்டில் ஏக அமர்க்களமாக விருந்து நடந்தது. அந்நத் தெரு வழியாகச் சென்றவர்கள் எல்லாரும் கஞ்சனின் வீட்டில் விருந்து நடப்பதைக் கண்டு வாயை பிளந்தப்படி நின்றனர். வீதியில் செல்பவர்கள் என்ன விஷயம்? என்று விசாரித்தார்கள்.

‘ஓ அதுவா? எங்கள் எஜமானர் தரும் விருந்து அல்ல இது. என் எஜமானர் இந்த ஜென்மத்தில் மற்றவர்களுக்கு விருந்து அளிக்க மாட்டார். விருந்து என்ற பேச்சிக்கு இடமே கிடையாது? என்று பதில் தந்தான் சேவகன்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் கஞ்சன். உடனே சேவகனைப் பார்த்து, “அடே, உனக்கு என்ன திமிர்? இந்த ஜென்மத்தில் மற்றவர்களுக்கு நான் விருந்தளிக்க மாட்டேன் என்று என்னுடைய சார்பில் உறுதிமொழி கொடுக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?” என்று சீறி விழுந்தான்.


பார்வதி அருண்குமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (3-Nov-15, 10:42 pm)
பார்வை : 1351

மேலே