இந்திய ரூபாய் தாள்

இந்திய ரூபாய் தாள் !

ஒரு ரூபாய் தாள் அச்சடிக்க ஒரு ரூபாயும் பதினான்கு காசுகளும் செலவாகிறது !
அதனால்தான் ஒரு ரூபாய் தாள் அச்சடிப்பதை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது !

மீண்டும் வெளியிடலாமா என பரிசீலித்து வருகிறார்கள் !!

அதே நேரம் ஐந்து ரூபாய் தாள் அச்சிட 48 காசுகள் மட்டுமே செலவாகிறது ! பத்து ரூபாய் தாள் அச்சிட 95 காசுகளும், இருபது ரூபாய் தாள் அச்சிட ஒரு ரூபாய் 46 காசுகளும், ஐம்பது ரூபாய் தாள் அச்சிட ஒரு ரூபாய் 81 காசுகளும், நூறு ரூபாய் தாள் அச்சிட ஒரு ரூபாய் 79 காசுகளும், ஐந்நூறு ரூபாய் தாள் அச்சிட மூன்று ரூபாய் 58 காசுகளும், ஆயிரம் ரூபாய் தாள் அச்சிட நான்கு ரூபாய் 6 காசுகளும் செலவாகிறது !

ரூபாய் தாள்கள் கிழிவதையும், சேதம் அடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் தாள்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடலாம் என்கிற யோசனையில் உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி !

எழுதியவர் : செல்வமணி (9-Nov-15, 8:24 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : india rupai THAAL
பார்வை : 534

மேலே