சின்னப் புள்ளையா இருக்கே - நிமிட கதை

சின்னப் புள்ளையா இருக்கே!

‘‘ஹ லோ மாலதி, நான் அமுதா பேசறேன்...’’

‘‘ஹேய் அமுதா! எப்படி இருக்கே?’’

‘‘நான் நல்லா இருக்கேன். நீதான் மாலதி ரொம்பப் பெரிய ஆளா மாறிட்டே. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் கண்டுக்கிறதே இல்லை.’’

‘‘ஹேய், அப்படி இல்லை அமுதா. என்கிட்டே யார் நம்பரும் இல்லை. தவிர, இப்போ நான் நிஜமாவே ரொம்ப பிஸி. கம்பெனி வேலையா மாசத்தில் பாதி நாள் பறந்துட்டே இருக்கேன். ஆமா, உனக்கென்ன இப்போதான் என் ஞாபகம் வந்ததா?’’

‘‘நேத்துதான் உன் செல் நம்பரே கிடைச்சுது. எத்தனை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேக்குறது..?’’

‘‘எனி குட் நியூஸ்?’’

‘‘ஆமா, எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு... அடுத்த மாசம் கல்யாணம்.’’

‘‘கங்கிராட்ஸ், எனக்குக்கூட வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காங்க அமுதா.’’

‘‘வீட்ல பார்க்கிறாங்களா? என்ன சொல்றே, ஸாரி... ப்ளஸ் டூ படிக்கிறப்போ பாண்டியன்னு ஒருத்தரை நீ லவ் பண்ணியேப்பா!’’

‘‘பாண்டியன்..? ஓ, அவரா? முகமே மறந்துபோச்சு. அதுக்கப்புறம் நான் காலேஜ் சேர்ந்து யு.ஜி., பி.ஜி., பி.ஹெச்டி., முடிச்சு, இப்போ வேலையில் சேர்ந்து மூணு வருஷம் ஆகிடுச்சு. அதுக்குள்ளே நாலஞ்சு பாண்டியன்களைப் பார்த்துட்டேன் அமுதா! நீ இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கே!’’

-வந்தனா

எழுதியவர் : வந்தனா (9-Nov-15, 6:05 pm)
பார்வை : 240

மேலே