என் செய்தியில் உண்மை இருந்தால்…

38. என் செய்தியில் உண்மை இருந்தால்….


காந்தியடிகள் சாதாரணமாக எல்லோரையும் நம்புபவர். ஆனால் கொள்கைகள் பற்றிய விஷயங்களில் மிக விழிப்புடன் இருந்து நன்றாக அவைகளை அலசிப்பார்ப்பார். அவர் சிறு சிறு விஷயத்திலும் கண்டிப்புடன் இருப்பார். யாராவது தன் கருத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்காகப் பிடிவாதம் செய்தால் வர் தன் முடிவில் மிகவும் திடமாக நின்றுவிடுவார்.

உப்புச்சத்தயாகிரகத்தின் போது பிரசித்தி பெற்ற தண்டியாத்திரையை அடிகள் மேற்கொண்டார். அவருடைய கடைசி செய்தியை ‘டேப்ரிக்கார்டி’ல் செய்து நாட்டிலுள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பரவச் செய்ய வேண்டுமென நண்பர்கள் நினைத்தனர்.

இதை காந்தியடிகளிடம் எடுத்துச் சொல்வதற்காக குழு ஒன்று சென்றது. இக்குழுவின் உறுப்பினர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாதும் ஒருவர். வர் காந்தியடிகள் முன் மேற்சொன்ன யோசனையைச் சமர்ப்பித்தார். ஆனால் அடிகள் உறுதியான குரலில் அந்த யோசனையை நிராகரித்து விட்டார். வந்தவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள். வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். அப்போது காந்தியடிகள் என்னுடைய பேச்சுக்களை என் குரலிலேயே பதிவு செய்து அதை மக்களுக்கு பரப்பவேண்டுமென்ற அவசியமில்லை. என்னுடைய செய்தியில் உண்மை இருந்தால் பதிவு செய்யாமலேயே ஒவ்வொரு வீட்டிலும் என் செய்தி பரவட்டும். என் செய்தியில் சத்தியம் இல்லையென்றால் அதை செய்வது வீணாகும்’ என்றார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:54 pm)
பார்வை : 123

சிறந்த கட்டுரைகள்

மேலே