நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்கிறேன்

39. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்கிறேன்


ஏதோபல காரணங்களால் காந்தியடிகளுக்கு மகாராஷட்டிரத்தில் பல எதிர்ப்பாளர்கள் உருவாகியிருந்தார்கள். சின்னஞ்சிறு விஷயங்களின் பொருட்டும் காந்தியடிகளின் மாகராஷ்ட்டிர துவேஷத்தைக் கண்டார்கள்; அத்துடன் நீட்டி விரித்து அவரைப்பற்றிய போலிப்பிரச்சாரம் செய்தார்கள், மத்தியப் பிரதேசத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் மந்திரி சபையிலிருந்து டாக்டர் கரே அவர்களை விலக்கவேண்டிவந்தது. இதற்குப் பின்னாலும் மாகராஷட்டிர துவேஷத்தை அவர்கள் கற்பித்தார்கள். தம்முடைய பழைய மாணவி குமாரி ப்ரேமா பஹனுக்குக் காந்தியடிகள் எழுதின கடித்த்தில் தம் மனதைத் திறந்து வைத்திருந்தார். ஆண்-பெண்ணின் திருமண வாழ்வும், குடும்ப உறவையும் பற்றிய சில விஷயங்களை சங்கோசமின்றி அக்கடித்த்தில் அடிகள் எழுதியிருந்தார். தம்முடைய சில அனுபவங்களையும் கூறியிருந்தார். இக்கடிதங்களை வைத்துக்கொண்டே அவர்கள் அடிகளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்க முயற்சித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிகளினால் பலரும் வருத்தமுற்றனர்; குறிப்பாக உயர்ந்த குணம் படைத்த பெரும்பான்மை மகாராஷ்டிர்ர்களும் இது மிகுந்த வேதனை அளித்தது. இந்த விஷப் பிரச்சாரத்தை எப்படி தடுப்பது என்றே அவர்களுக்குப் புரியவில்லை.

அச்சான்றோருள் பம்பாயிலுள்ள திருமதி அவந்திகாபாய் கோகலேயும் ஒருவர். காந்தியடிகள் மீது அவருக்கு மிகுந்த பக்தி. அவர் ஒவ்வொரு வருடமும் அடிகளின் பிறந்த நாளன்று தன் கையாலேயே நூற்று, செய்த வேஷ்டியை பரிசாக அனுப்பி வந்தார். அவ்வருடமும் இதேமாதிரி செய்து அனுப்பி வைத்ததோடு தன் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். அக்கடிதம் பின் வருமாறு ”தங்களை எதிர்த்து இப்பகுதியில் மாரட்டிப் பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் பொய் புரட்டான போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ளும் சக்தி எனுக்குக் கிடையாது. மனம் மிகவும் சஞ்சலப்படுகிறது. தாங்களோ முற்றிலும் மௌனமாக இருக்கிறீர்கள். இதைப்பற்றி ஒன்றும் பேசுவதுமில்லை, எழுதுவதுமில்லை. நமக்கு எந்தவிதமான உபாயமும் தெரியவில்லை. இந்து விஷப்பிரச்சாரம் மேலும் பரவாமல் தடுக்க ஏதேனும் வழிசெய்ய வேண்டும்.”

அதற்குக் காந்திஜி கீழ்க் கண்டவாறு பதில் எழுதினார். சில நண்பர்கள் மூலமாக என்னைப் பற்றிய போலிப் பிரச்சாரம் நடைபெறுவதை நான் அறியாமல் இல்லை. ஆனால் நான் என்ன செய்யட்டும்? எப்படி சிலர் என்னைப் பழித்துப் பேசி இன்பம் காண்கிறார்களோ அதுபோல் என்னை சிலர் ஏற்றிப் பேசி புகழவும் செய்கிறார்கள். பழிச் சொல்லால் நான் வாடிப் போகவேண்டும்? அதே போல் புகழுரைகளாலும் நான் ஏன் முக மலர்ச்சியடைய வேண்டும்? நிந்திப்பவர்களினால் நான் குறைந்து போய் விடுவதுமில்லை. நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருக்கிறேன். இம்மியும் குறைந்தோ, கூடுவதோ கிடையாது. ஆண்டவன் சந்நிதானத்தில் மனிதன் உண்மையுள்ளவனாய் நடந்து கொண்டால் அவனுக்கு எங்கும் எப்போதும் அச்சமே கிடையாது.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:55 pm)
பார்வை : 160

மேலே