கடமை தவறேல்

42. கடமை தவறேல்


அந்த நாட்களில் காந்தியடிகள் தினந்தோறும் தன் மூன்றாவது மகன் ராமதாஸூக்கு ஒரு மணி நேரம் குஜராத்தி சமஸ்கிருதம், ஆங்கிலம முதலியவைகளை சொல்லிக்கொடுப்பது வழக்கம். சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் இந்து சமயத்தின் முதல் புத்தகம், ‘எங் இந்தியாவின்’ கட்டுரைகள், இன்னும் வேறு பொருள்களும் இடம் பெற்றிருந்தன. இம்மாதிரி வகுப்பு நடைபெறும் நாட்களில் ஒரு நாள் தேசிய காங்கிரஸ் மகாசபை கூட்டம் ஆமதாபாத்தில் நகரவையின் புதிய கட்டிடத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. காந்தியடிகள் காலை நான்கு மணிமுதல் இரவு பத்து மணிவரை தலைவர்களுடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பார். ஒரு நாள இரவு ஒன்பது மணிக்கு வந்து ‘பா’விடம் ‘ராமன் எங்கே?’ எனக்கேட்டார்.

‘அவன் களைத்துத் தூங்கி விட்டான. அவனை இப்பொழுது எழுப்ப வேண்டாம்’ என்று ‘பா’ கூறினாள்.

‘ஆனால் தினமும் ஒரு மணி நேரம் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது வழக்கமாயிற்றே. அவன் இன்று படிக்க மறுத்தால் பிறகு நான் தூங்கிவிடுகிறேன்.’ என்றார் அடிகள்.

அன்றும் முறை தவறவில்லை. ராமதாஸை எழுப்பி சிறிது நேரம் அவனைப்படிக்க வைத்த பிறகே அடிகள் தூங்கினார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (13-Nov-15, 6:15 am)
பார்வை : 591

மேலே