இப்பொழுதுதான் இது ஹரிஜனங்களுக்கு சொந்தமாயிற்றே

43. இப்பொழுதுதான் இது ஹரிஜனங்களுக்கு சொந்தமாயிற்றே


காந்தியடிகளின் நெருங்கிய நண்பர் ஒருவருக்குக் கல்யாணம் நடைபெற்றது. பணகார நண்பர் ஒருவர் மணமகனுக்கு விலையுயர்ந்த நகை ஒன்றைப் பரிசளிக்க விரும்பினார். மணமகன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பணக்கார நண்பர் காந்தியடிகளிடம் வந்து ‘இவன் இப்படியே பிடிவாதம் பிடிக்கிறான். பரிசாக்கொடுப்பதை வாங்குவதில்லை’ எனக் குறைபட்டுக்கொண்டார்.

காந்தியடிகள் அந்த நகையைப் பார்த்தார். அதன் சிறப்பைப் கூறிப்பாராட்டினார். ஆனால் மணமகன் விரும்பாதபோது அப்பரிசை அளிக்கக்கூடாது என்ற அவருடைய கருத்தையும் கூறினார்.

பாவம், செல்வந்தர் மிகவும் வருத்தப்பட்டார். என்ன செய்ய முடியும்? கடைசியில், ‘சரி நல்லது, என் நகையைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்றார்.

‘இப்பொழுதுதான் இது ஹரிஜனங்களுக்குச் சொந்தமாயிற்றே, திருப்பித் தரமுடியாது’ என்றார் காந்தியடிகள்.

பாவம்! பணக்கார்ர் ஏமாற்றமடைந்தவராய் அடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது, வெளியிலும் சொல்லிக்கொள்ளமுடியாது. அரைமனதுடன் திரும்பினார்.

ஆனால், அடிகள் அவருடைய மனதை நன்றாக அறிந்திருந்தார். சிறிது நேரம் கழித்து ‘நகையைக் கொண்டுபோகலாம். அதன் பெறுமானத்ஐப் பணமாக ஹரிஜன் நிதிக்கு அளித்து விட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மறுநாள் நகைக்குப் பதிலாக அதன் பெறுமானத்தைக் காட்டிலும் கூடுதலான தொகைக்கு ஒரு ‘செக்’ கிடைத்துவிட்டது.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (13-Nov-15, 6:16 am)
பார்வை : 149

சிறந்த கட்டுரைகள்

மேலே