டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்

46. டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்?


சேவாக் கிராமத்தில் காந்தியடிகளின் குடிசைக்கு முன்னால் கிழக்குப் பக்கம் மற்றொரு குடிசை இருந்தது. அடிகளைக் காணவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அங்கு தங்குவர். அந்நாட்களில் ஆச்சார்ய நரேந்திரதேவ் அதில் தங்கியிருந்தார். அவர் ஒரு பேரறிஞராக மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்டத்தின் பழுத்த தலைவரும் ஆவார். காங்கிரசுக்குள்ளிருந்த சோஷலிசக் கட்சியை நிறுவியவரும் அவரே தான். ஆனால் இளைப்பால் தொல்லைப்பட்டக் கொண்டிருந்தார். காந்தியடிகள் அவரைப் பார்த்த போது தம்முடன் சேவா கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

அந்நாட்களில் தான்பாரத்த்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும்பொருட்டு ‘கிரிப்ஸ் மிஷன்’ இந்தியாவிற்கு வந்திருந்தது. இக்குழுவினருடன் பேச காந்தியடிகளுக்கு அழைப்பு வருவது இயற்கைதானே. அவர் டில்லி சென்று பேசி விட்டு உடனே திரும்பிவிட்டார். ‘தூதுக்குழு டில்லியில் தங்கியிருப்பதலா இன்னும் சில நாட்கள் இங்கு தாங்கள் தங்கிச் செல்லலாமே’ என பத்திரிகை நிருபர்கள் கேட்டனர்.

அதற்குக் காந்தியடிகள் ‘ஒரு டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்?’ என்று பதிலளிக்கும் முறையில் மறு கேள்வியை கேட்டார்.

அவர் ஆச்சாரிய நரேந்திர தேவுக்க்உச் சிகிச்சை அளித்துக் கவனிப்பதற்க்காக ஆசிரமத்திற்கு உடனே திரும்பிவிட்டார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (13-Nov-15, 6:18 am)
பார்வை : 428

சிறந்த கட்டுரைகள்

மேலே