‎முதுமை‬, நோய், மரணம்

பூமி தன்னைத் தானே ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது நாம் அறிவோம். அதன் சுழற்சியால் அதன் மேற்பரப்பில் உள்ள பொருட்களை தனது மையத்தை நோக்கி இழுக்கிறது. நமது உடலில் கனத்த அணுக்கள் பூமியின் மையம் நோக்கி இழுக்கப் படுகிறது.

அதே சமயம் எடை குறைவான உயிர் ஆற்றல் உடலை விட்டு விசிறி அடிக்கப் பட்டு மேலே தள்ளப் பட்டுக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் உயிர் சக்தியின் விலகல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. உயிர் ஆற்றலின் விலகலையே முதுமையாய் உணர்கிறோம்.

உயிர் ஆற்றல் செறிவு பெற்ற உடல் வயதானாலும் இளமையாய் இருக்கும். உயிர் ஆற்றல் செறிவு குறைந்த உடல் இளைய வயதிலும் முதுமை தோற்றம் காட்டும்.

ஒவ்வொரு நாளும் தளர்வு அடைந்து கொண்டே செல்லும் நரம்புகளும் முதுமைக்கு இன்னொரு காரணம். நரம்புகள் இழுத்துக் கட்டிய வில்நாண் போல் உறுதியாய் இருந்தால் பாரதியின் “ உள்ளம வேண்டியபடி செல்லும் உடல்” – கிடைக்கும்.

உடல் ஜீவ காந்தத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வும், அதன் ஓட்டத்தில் ஏற்படும் குழப்பமும் உடலின் மற்ற மூன்று ஓட்டங்களையும் (ரத்த ஓட்டம, வெப்ப ஓட்டம, காற்று ஓட்டம) பாதிக்கும். அந்த பாதிப்பையே நோய் என்று உணர்கிறோம்.

உடலில் காந்தம் திணிவு பெற்று இருந்து, அதன் ஓட்டத்தில் எந்த குழப்பமும் ஏற்படாது இருந்தால், உடல் செல் அடுக்குகள் சீராக இருக்கும். ரத்த ஓட்டம, வெப்ப ஓட்டம, காற்று ஓட்டம முறையாய் நடந்து உடலுக்கும் உயிருக்கும் ஒரு ஹார்மநியான ஆரோக்கிய உணர்வு கிடக்கும். அதற்கு காந்தத்தை முறையாய் பராமரிக்க உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம ஆகியவற்றில் அளவும், முறையும் காக்க வேண்டும்.

உடலில் உயிர் சக்தியை பிடித்து நிறுத்தி வைப்பது சுக்கிலம் தான். வித்துக் கலயம் உடைந்து விந்து நாத திரவம் உடலை விட்டு முழுமையாய் வெளியேறினால், வேதான்களை உடலில் நிறுத்தி வைக்கும் நிகழ்வு நடக்காமல் வேதான்கள் உடல் என்ற எல்லையை விட்டு வெளியேறுவதை மரணம் என்கிறோம்.

உயிர் தாங்கியான வித்துவை போதிய அளவு கெட்டிப்படச் செய்து விட்டால், உயிரை உடலிலேயே நிரந்தரமாக தங்கி விடச் செய்ய முடியும். வாழ்ந்தது போதும் என்ற மன நிறைவு வரும் போது, உடல் இயக்கத்தையும், மன இயக்கத்தையும் நிறுத்தி விடலாம். அந்த வித்தையை சித்தர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுவே ஜீவ சமாதி ஆகுதல் என்பார்கள். பழனியில் போகர் அத்தகைய ஜீவசமாதி அடைந்த ஒரு சித்தர் என்கிறார்கள்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (22-Nov-15, 8:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 565

சிறந்த கட்டுரைகள்

மேலே