முற்றும் பெற்ற முழு மனிதன்

முற்றும் பெற்ற முழு மனிதன் ..... இந்த உலகத்திலேயே
எங்கேயும் இல்லை. இதற்கு முன்பும் இருந்த்தில்லை,
இதற்கு பின்பும் இருக்கப்போவதில்லை. எவ்வளவோ புத்தகங்கள்

எத்தனையா மகான்கள்
எத்தனையோ மதங்கள்
எத்தனையா புனித நூல்கள்
எல்லாமே ஆராய்ந்தாகிவிட்டது

இன்னும் இந்த மனித சமூகத்தில் அமைதி திரும்பவில்லை
தேடல்கள் ஓயவில்லை புறத்தேடல்கள் உண்மைக்கு வழிகாட்டியே தவிர அவைகள் ஒருபோதும் உண்மைகள் ஆகிவிடாது இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும்,. தெய்வத்தன்மை அடைவதும், தெய்வத்தை அணுகுவதும், அவனைக் காண்பதுமே நெறியின் ஒரே நோக்கமாகும்.

இறைநிலை என்பது எல்லையற்றது. இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. எனவே ஆன்மா நிறை நிலையையும், எல்லையற்ற நிலையையும் அடையும் பொழுது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீரும்.

இறைவனை நிறை நிலையாக ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக இருக்கின்ற ஒருவர் மட்டுமேயாக, பணியரிவடிவமாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித்தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவதுதான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கின்றோம்.

இந்த சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கைப் பெருகப் பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக பிரபஞ்ச உணர்வாக மாறும்போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.

எல்லையற்ற பிரபஞ்சம் தழுவிய அந்த தனித் தன்மையைப் பெற வேண்டுமால், துன்பம் நிறைந்த இந்த உடல் சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும்போதுதான் மரணம் அகலமுடியும். இன்பத்துடன் ஒன்றும்போதுதான், துன்பம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும்போதுதான், பிழைகள் அகல முடியும்.

இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒரு மாயை, இடைவெளியற்று பறந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள்தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது.

உண்மையான அமைதி, உயிரோட்டம் உள்ளது. சக்தி மிகுந்தது, மிக ஆழமானது.
அதில் அறிவும், உணர்வும், விழிப்பு நிலையும் முழுமையாக இருக்கிறது. எந்த அளவுக்கு துணிவுடன் இருக்கின்றீர்களோ அந்த அளவுக்கு அதிக உயிரோட்டத்துடன் இருப்பீர்கள்.

மனதை தியானத்தின் மூலம் கடந்து விட்டால் பேரானந்தம் கிட்டும்
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. எவர் ஒருவர் தனக்குள்ளேயே தேடல்களை தொடங்குகிறரோ அவருக்கே அமைதி கிட்டும்....

என்னைப்போன்ற மிகசாதரணமானவர்களின் கருத்துகள் கூட வரவேற்க்கபடுகின்றது.

இது தனி நபர்கள் பதிவுகளை பிரித்து பார்த்து தங்கள் அன்பை பகிரும் இடமாகும்" தவறு இருப்பின் மன்னிக்கவும்.. நன்றி

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (22-Nov-15, 8:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 242

மேலே