நட வண்டி - 1

நடவண்டி... 1
எத்தன பேரு பாத்திருப்பம் .. எத்தன பேருக்கு இன்னும் நெனப்புல இருக்குமின்னும் தெரியல... நடைவண்டி.... மூணு ரோத ஊனுகோலு.. தத்தக்கா புத்தக்கான்னு தடுமாறுன வயசுல புடிச்சிக்கிற கெடைச்ச ஒன்னுதாம்ன்னு சும்மா சொல்லிப்புட்டாலும் அதுதேங்குறேம் நாம அம்புட்டு பேத்துக்கும் உருண்டு உருண்டு நட பழக்கிக் குடுத்திச்சி... எத்தின பேரு மறுத்துப் பேசிப்புடுவீய.. பாக்குறேன்... நாஞ் சொன்னது சரிதான..?

இப்பம் எதுக்கு இவன் நடவண்டியப்பத்தி கிறுக்கிகிட்டுத் திரியிறாம்ன்னு யோசிக்கிறது புரியிது.. சித்தப் பொறுங்க வாறன்.. பொதுவா ஒரு செவத்தப் புடிச்ச பச்சப்புள்ள வெறுமனே எந்திரிச்சி மட்டுந்தான நிக்கும். ஆனா அது நடவண்டி புடிச்சி ஓட்டுறப்பப் பாருங்க... சமயத்துல குப்புறடிச்சி விழுந்தாலும் மறுக்கால எந்திரிச்சி அதே வேகம் மாறாம கெலிச்சிகிட்டே ஓட்டி வெளையாடும்.

நாம அம்புட்டு பேரும் செத்து விழுகுற வரைக்கும் எதாவது ஒரு கொழந்தத் தனம் பண்ணிக்கிட்டேதா கெடக்குறோம். அது... இப்ப நா எழுதிக்கிட்டு இருக்க மாதிரி.. நீங்க இவன் என்னத்த எழுதிவச்சிருக்கான்னு படிச்சிகிட்டு இருக்க மாதிரி.. இப்படி ஏதாவது ஒரு கொழந்தத்தனம் பண்ணிக்கிட்டேதா கெடக்குறோம்..அதுல நாம அம்புட்டு பேரும் மறக்கவே முடியாத ஒரு பெரும்பிள்ளைத்தனமான கொழந்தத்தனம் பள்ளிக்கொடம் போனது... படிச்சது. இப்பம் இருக்குற பள்ளிக்கொடங்களப்பத்தி நாம பேசப் போறதில்ல. எம் பாட்டம்.. எங்க அப்பன்... அப்பறம் நானு படிச்ச காலத்துல இருந்த பள்ளிக் கொடங்களப்பத்திதெம்...பேசப்போறோம். பாடத்த வாழ்க்கையாவும்... வாழ்க்கையப் பாடமாவும் சொன்ன... சொல்லிக்குடுத்த... பள்ளிக்கொடங்களப் பத்திதா இனி பேசப்போற அம்புட்டு பாகமும்...

நாம மழைக்கிக் கொட பள்ளிக்கொடத்துக்குப் போனதில்லன்னு பெரும பீத்திக்கிற அம்புட்டு பயலும்.. கண்டிப்பா மழைக்கி பள்ளிக்கொடம் ஒதுங்கியிருப்பான். படிக்க இல்லாட்டியும்.... ஊருக்காட்டுல நல்ல மழபெஞ்சதும்... ஊருபூரா குடிசகொட்டாயா இருந்ததும்... ஒரே ஒழுகாத ஒட்டுக் கட்டடமா பள்ளிக்கொடம் இருந்ததுமான பல காரணத்துகள இங்க சொல்லலாம்.. மழக்கி ஒதுங்குன பயலுக மன்னரு சரித்திரம் பேசுன கதைகள எல்லாம் படிச்சிப்புட்டுத்தான வந்து கெடக்குறோம் இங்க....

என்னடா... இவன்.. நடவண்டி... நாத்துக்கட்டுன்னு என்னமோ ஆரம்பிச்சி பள்ளிக்கொடம்ன்னு என்னவோ சொல்றான்னுதான யோசிக்கிறீய.... இந்தா வந்துர்றேன்... நாம பள்ளிக்கொட வாழ்க்கையில... என்னக் கடந்து போன.. என்ன அவுக கூட கடத்திக்கிட்டுப் போன... வாத்தியாருகளப்பத்திதா இந்த மொத்த எழுத்தும் பேசப்போவுது. நாந் தப்பா முள்ளுக் காட்டுல போறதுக்கு முன்னாடி.. என்னக் குப்புறத்தள்ளிக் கதறவுட்டு...சரியான பாதக்கித் திருப்பிவிட்டு...நா ஓடயில..கவசமா நின்னு காத்து... கெலிக்கவச்சிச் சிரிக்கவச்சி நடபழக்குன எம் வாத்தியாருகளப் பத்தித்தா இந்த “ நடவண்டி”

ஒங்க எல்லாரு கொழந்தத்தனத்துலையும் ஏதாவது ஒரு நடவண்டியப் புடிச்சிக்கிட்டுதா வந்திருப்பீக. அத மனசுல இருத்திக்கிட்டே இந்தப் பய நட பழகுன வாழ்க்கையையும் படிச்சிப் பாருங்க.... இது நாம எல்லாருங் கடந்து வந்த பாதெ...... இந்த எழுத்த எனக்குப் படிச்சிக் குடுத்த எஞ் சாமிகளுக்கு
படைச்சி வைக்கிறேன்....
இனி.... நடவண்டி........!!

எழுதியவர் : கட்டாரி (24-Nov-15, 5:56 am)
பார்வை : 299

மேலே