என்ன உலகம் இது

அருகில் இருப்பவருடன் பேச நேரமிருக்காது
ஆனால்,
hikeயில் பேச நேரமிருக்கும் உலகம் இது...

வாழ்த்தையும், பரிதாபத்தையும்
facebookல் போட்டு likeயின் மூலம்
வாங்கிகொல்லும் உலகம் இது...

ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு
அவர்களது மனநிலையை
whatsapp statusயில் படிக்கும் உலகம் இது...

தங்கையின் திருமண நாளிதழைகூட
வேகமாக download செய்து
மெதுவாக படிக்கும் உலகம் இது...

உதித்த எண்ணத்தைகூட
உறவினரிடம் பகிராமல்
ஊராரிடம் twitterயில் பகிரும் உலகம் இது...

பெற்ற குழந்தைக்கு
அப்பாவின் முகம் மறந்துவிடகூடாது
என்று skypeயில் முகம் காட்டும் உலகம் இது...

e - mailலில் காதலை சொல்லி
பல மையில்களுக்கு அப்பால்
காத்திருக்கும் உலகம் இது...

சொல்லிக்கொடுக்க குரு இருந்தும்
அது சரியான விடையா என்று
googleலில் தேடும் உலகம் இது...

செத்தவனுடன் selfie எடுத்து
அதை profile pictureஅ வைக்கும் உலகம் இது...

வீட்டுக்கு வா என்று சொல்லாமல்
onlineக்கு வா என்று
சொல்லும் உலகம் இது...

பெத்தவங்களை olxயில் விற்றுவிட்டு
பென்ஸ் காரை online யில்
வாங்கும் உலகம் இது...

நல்லா இருக்கிறீயா என்பதைகூட மாற்றி
android mobile வைகத்திருக்கியா என்று
கேட்கும் உலகம் இது...

மொத்தத்தில்
மொகத்தை பார்த்து சிரிக்கும் காலம் போய்
moblieஐ பார்த்து சிரிக்கும் காலம் வந்துவிட்டது...

Appக்கள் மட்டும் வாழ்க்கைக்கு தேவையில்லை
அப்பா அம்மாவும்தான் தேவை என்று
எப்பொழுது புரிகிறதோ
அப்பொழுதான்
இந்தியனும் உருபடுவான்
இந்தியாவும் உருபடும்...

எழுதியவர் : ஸ்ரீ தேவி (24-Nov-15, 9:45 pm)
Tanglish : yenna ulakam ithu
பார்வை : 391

மேலே