அருகி ல் நில்

இந்த
அண்ட சராசரத்தின்
ஆனந்த அதிர்வுகள்
அணிவகுக்கும்
அமிழ்தத்தின் சுவை திரண்டு
அரங்கேறும்.

நகரா நம்பிக்கைகள்
புதிராகும்
நினைவுகள் காலாவதியாகாமல்
காத்திருக்கும்
கற்பனைகள் கனதியாகும்
காற்று மண்டலத்தில்
கரைந்து போகும் .

வியாபித்த
வெண்மேகத் தடவலில்
வாசனை வாழ்வு
வசமிழந்து போகும்
எண்ணப் புயலடித்து
தாழமுக்கம் மையம் கொள்ளும்
மௌனித்துக் கடக்கும்.

குளிர்ந்த மேகத்தாரை
காற்றை மோகித்து சல்லாபிக்கும்
ஆனந்த இரைச்சலோடு
சிந்தனை இடியும் மின்னலும்
மழைப் புயலாகும்
மூர்க்க முயக்கத்தால்
முனகிக் கொள்ளும்.

இரைந்தெழும் அலைகளை
மழை வெள்ளச்சாரல்
கலைத்துக் குழப்பும்
வெண் மண் தரையை முத்தமிட்டு
சில்லறை சுவடுகளை
அள்ளிக் கொண்டு சங்கமிக்கும் .

நீண்டதொரு மூச்சு
உன்னை உச்சரிக்கும்
இதயச் சுவர் வெடித்து
துடிப்பை தடிப்பாக்கும்
இடிந்து இரட்டிப்பாக்கி
இறுதியாய் தோற்றுப்போகும் .

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (27-Nov-15, 5:47 pm)
Tanglish : arugi l நிl
பார்வை : 133

மேலே