மரியாதை ராமன் கதைகள் -பேராசை பெரும் நஷ்டம்

பாளையம் என்னும் ஊரில் அருகருகே இரு நகைக் கடை வியாபாரிகள் வாழ்ந்து வந்தனர்,

இதில் ஒருவரின் பெயர் ராமன், மற்றொருவரின் பெயர் ராஜன், ராமன் மிகவும் அன்பானவர் யாவருடனும் எளிதாக பழகக் கூடியவர், ராஜனும் அதே போல் தான் என்ன ராஜன் கொஞ்சம் சிடு மூஞ்சி, இருவரும் எப்பொழுதுமே கடுக்கன் அணிந்திருப்பார்,

இருவருக்கும் இடையே எப்பொழுதும் வியாபார போட்டி இருந்து கொண்டே இருக்கும்,

ஒருநாள் ராமன் தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று வினவி கொண்டிருந்தார்,பிறகு ராஜனும் தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று வினவினார், இருவரும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு சண்டை போட்டு கொண்டனர்,

பிறகு இருவரும் மரியாதை ராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர்,

மரியாதை ராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார் மேலும்

மரியாதை ராமன் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தார்,

இரவு கழிந்தது சூரியன் உதித்தது , அனைவரும் மரியாதை ராமனின் அவையில் கூடினர்,

காணாமல் போன உங்கள் இருவரில் ஒருவரின் கடுக்கன் கிடைத்து விட்டது, என்று கூறி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த இரு கடுக்கனை மரியாதை ராமன் இருவர் முன் நீட்டி இது உங்களில் யாருடையது என்று கேட்டார்,

ராமன் அமைதியாக இருந்தார், பேராசை கொண்ட ராஜனோ அந்த கடுக்கன் என்னுடையதே, என்னுடையதே என்று பல முறை கூறினார்,

உடனே மரியாதை ராமன் ராஜன் தான் கடுக்கன் திருடன், ராஜன் தான் ராமனின் கடுக்கனை திருடி விட்டு, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க ராஜனே ராஜனின் கடுக்கனையும் மறைத்து வைத்துள்ளார்,

ராஜன் ராமனின் கடுக்கனை திருப்பி தருமாறும் மேலும் 500 சவுக்கடி வழங்குமாறும் கூறி தீர்ப்பை முடித்து வைத்தார்,

ராஜனும் வலி தாங்காமல் உண்மையை ஒப்பு கொண்டார்

எழுதியவர் : விக்னேஷ் (27-Nov-15, 9:54 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 1246

மேலே