இனி தொடுவேனா

படித்ததில் எச்சரிக்கை செய்தது:

இதை படித்தால் ஸ்மார்ட்போனை இனி தொடுவேனா??

பொது கழிவறைகளை விட உங்களது உயிரினும் மேலான ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட அழுக்கு இருக்கின்றது. இதை நாங்கள் சொல்லவில்லை, இங்கிலாந்தை சேர்ந்த விச் பத்திரிகை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

பொது கழிவறைகளில் காணப்படுவதை விட சுமார் 18 சதவீதம் அழுக்குகளை உங்களது ஸ்மார்ட்போன் கொண்டிருக்கின்றது என்கின்றது விச் பத்திரிகையின் ஆய்வு முடிவு.
உங்களுடன் எந்நேரமும் இருக்கும் உங்களது செல்ல ஸ்மார்ட்போன் ஏன் இதை செய்ய வேண்டும்? பல ஆண்டு ஆய்வுகளை ஒன்றிணைத்து பார்த்தால், இது முக்கிய காரணம் நீங்கள் தான். நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் கிருமிகளுக்கு புகுந்த வீடாக இருக்கின்றன, மேலும் இதை நாம் மட்டும் பயன்படுத்தாமல் யார் கேட்டாலும் உடனே வழங்கி விடுகின்றோம், அவர்களும் அழுக்கு கைகளோடு அதனினை கொஞ்சுகின்றனர். நாம் எப்பவும் மொபைல் போன்களை சுத்தம் செய்வதில்லை, அதேபோல் அதனினை பயன்பாடுத்தாமலும் இருக்க முடிவதில்லை..
உங்களது ஸ்மார்ட்போன் முழுதும் கிருமிகளின் இருப்பிடமாக இருக்கும் பட்சத்தில் இது உடல் நலத்திற்கு தீங்கானதா, இதற்கு நாம் ஏதும் செய்ய வேண்டுமா? அல்லது அப்படியே அதனினை ஏற்று கொள்ள வேண்டுமா?
ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது?

பல்வேறு அதிர்ச்சியூட்டும் ஆய்வுகளின் மூலம் உங்களது கைபேசியில் பொது கழிவறையை விட பத்து மடங்கு அதிக கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஏன் உங்களது ஸ்மார்ட்போனில் இவ்வளவு அழுக்கு?

முதலில் உங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது உங்களது வாய், மூக்கு மற்றும் காதுகளில் இருந்து அழுக்குகளை ஸ்மார்ட்போன் எடுத்து கொள்கின்றது. அடுத்து உங்களது பணி செய்யும் மேஜையில் இருந்து அதிகப்படியான அழுக்கினை எடுக்கின்றது. உங்களது அலுவலக மேஜையின் ஒவ்வொரு சதுர அடியிலும் 79,000 கிருமிகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதோடு உங்களது மனிபர்ஸ் முதல் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களில் இருந்தும் லட்ச கணக்கான கிருமிகள் உங்களது ஸ்மார்ட்போனினை ஆக்கிரமித்து கொள்கின்றது.
அழுக்கு போன்கள் உங்களது உடல்நலத்தை பாதிக்குமா?

சர்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மொபைல் போன்களில் இருக்கும் கிருமிகள் உடல் உபாதைகளுக்கு வழி செய்யாது என்பதை உறுதி செய்துள்ளது. இதனால் ஆபத்து இல்லை என்று கூறி விட முடியாது. சில உயிரியலாளர்கள் அழுக்கு மொபைல் போன்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என நம்புகின்றனர். இதனால் அவர்களுக்காகவாவது அவற்றை சுத்தமாக வைப்பது அவசியமாகும். மேலும் சீரான இடைவெளியில் மொபைல் போன்களை சுத்தம் செய்வது நல்ல பலன்களை தரலாம்.

மொபைல் போன்களை சுத்தம் செய்யலாமா, எப்படி செய்வது?

ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்வதென்றால் உடனே ஜன்னல் சுத்தம் செய்யும் திரவம் மற்றும் திரையை மட்டும் சுத்தம் செய்ய நீரை பயன்படுத்தலாம் என நினைக்காதீர்கள். இவை சுத்தம் செய்யாமல் போனிற்கே ஆபத்தாகி விடும்.
போனினை சுத்தம் செய்ய யுவி ( அல்ட்ரா வைலட் ) போன் க்ளீனரை பயன்படுத்தலாம். இவை போன்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். சந்தையில் கிடைக்கும் அல்ட்ரா வைலட் போன் க்ளீனர் கருவிகளின் மூலம் மொபைல் போன்களை சுத்தம் செய்யலாம்.

போன்களை சுத்தம் செய்வதோடு உங்கள் தரப்பிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் போனினை கொடுப்பதை நிறுத்துவது அல்லது குறைப்பது, கையை அடிக்கடி கழுவுவது போன்றவை போனினை அழுக்காகாமல் பார்த்து கொள்ளும்.

எழுதியவர் : சாந்தி ராஜி (30-Nov-15, 10:54 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 187

மேலே