காதல் புரவியில்

அந்த மனுவில் போட்டியிடும்
யாரும் சோர்ந்து
போனதாக சரித்திரம் இல்லை

பொறுமையின் எல்லைக்கு
ஒரு போட்டி
தக தகவென கொதித்து
தாண்டவமாடிய கதிரவன்
வெட்கித் தலைகுனிய

வேகமாய் ஓடிய
மேகக் கூட்டங்கள்
மண்மடியில்
தாகங்கள் தீர்க்க
கூடிக் குலாவ

வெள்ளை உடை அணிந்து
வெறும் வெப்பத்தை தணித்து
வெண்ணிலா
இரவை தன்னுள் அடக்கி
திணித்து திணறி அமிழ
பற்றிக் கொள்ள

மல்லிகையும் முல்லையும்
பரத்தையாய் விரித்துக் கிடக்க
அமைதியாக அடங்கிப் போன
அலைகளோ
ஆர்ப்பரித்து எழுந்து
ஆர்ப்பாட்டம் செய்ய

மெல்லினமும் வல்லினமும்
இரண்டறக் கலந்து
ஊடல் காற்று
உல்லாசமாக உரசிக்
கலகம் செய்ய
இந்த மனுவில்
போட்டியிடும் யாரும்
சோர்ந்து போனதாக
சரித்திரம் இல்லை

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (1-Dec-15, 5:34 am)
பார்வை : 111

மேலே