ஞானதோயம்

-சாத்திரங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது உண்மை அறிவல்ல

அவைகளை மிக விரைவிலும் எளிதிலும் கற்றுக் கொள்ளலாம்
கற்றதை மறந்து மீண்டும் நிர்வி கல்ப நிலையை அடைய வேண்டும்

அப்போதுதான் இந்த உலகில் உயிர்த்திருக்கும் எல்லா உயிர்களின் உயிருருவையும் தெரிந்து கொள்வாய்

தனியாக இருக்க முடியாது என்பதால் யாரோடு இருப்பது அல்லது எதில் ஈடுபாடு கொள்வது என்று நினைக்கிறாய்.

உனக்கு தெரிந்தது எல்லாம் உன்னுடைய உயிருருவில் அர்த்தமற்றுப் போய் விடுகின்றன

கவனித்திருப்பவன் வாழ்க்கை அவனுடைய கட்டுப் பாட்டிற்குள் வந்து விடுகிறது

பிரக்ஞையின் ஒளியில்தான் எதுவும் மதிப்பு பெறுகிறது
எதிர் காலத்தில் வாழும் ஒருவனுக்கு இங்கே இப்போது வாழ்வது எப்படி என்பது தெரிவது இல்லை

நிகழ் காலத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் பாதையைத்தான் புத்தர் ஆசை என்கிறார். மனம் தான் தம் சிந்தனைகள் மூலம் வாழ்விலிருந்து தப்பிக்க வைக்கிறது.

பிரார்த்தனை என்பது சிந்தனையின் ஒரு பகுதிதான்
ஆனால் தியானம் எந்தச் சிந்தனையும் இல்லாதது
புத்தர் உங்களை தியானிக்கத் தான் சொல்கிறார்
தியானம்தான் நீ யாரென்று உன்னைக் காட்டுகிறது.

மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளுங்கள்
எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பதால் உன்னுடைய சக்தி மனதை விட்டு விலகிப் போய் விடுகிறது

அப்போது நீ மனமில்லாதவனாக ஆகி விடுகிறாய்
நீ மறுபிறப்பு எடுத்து விடுகிறாய் அந்தப் பிறப்பே
" ஞானதோயம் "

- தம்ம பதம் - ஓஷோ-

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (1-Dec-15, 9:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 250

சிறந்த கட்டுரைகள்

மேலே