வாழ்கை சக்கரம்

யாருமற்ற தனியறையில் இரவு தந்த சோகத்தில் தேவி தன் வாழ்கை சக்கரத்தை சுழற்றி பார்த்தாள்..

மனம் விரும்பிய மன்னவனையே கரம் பிடித்த பாக்கியவதி அவள்..
காதல் திருமணம் தந்த பரிசு அழகாய் ஒருஆண் ,அம்சமாய் இரு பெண் குழந்தைகள்..ஈரேழு வருடங்கள் இனிமையான வாழ்வு,,திடீரென ஒரு புயல் 'உன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ' என்று...பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை , பெரியவர்களிடம் அறிவுரை கேட்க மெத்த படித்த மனம் இடம் கொடுக்கவில்லை..தன்னிச்சையாய் எடுத்தால் பேனா , எழுதினாள் விவாகரத்து எனும் விஷபரீட்சை..பெண் பிள்ளைகள் எனக்கு , ஆண் பிள்ளை உனக்கு என தான் சுமந்த செல்வங்களை பிரித்தாள்...
காலங்கள் காட்டாற்று வெள்ளம்போல் முன்னேறி கொண்டஇருந்தது .ஈரைந்து வருடங்கள் கரைந்தே விட்டது...
அப்போது ஒரு நாள் யாரோ ஒருவரின் மூலம் ஒரு செய்தி..'உன் மகன் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டான்,,அப்பாவை எதிர்த்து,, தந்தை தற்போது முதியோர் இல்லத்தில் ' என்று ...
ஆணவம் பிடித்த மனம் அடக்க முடியாது சிரித்தது மனதிற்குள்,,கணவனை சென்று பார்க்க கர்வம் இடம் கொடுக்கவில்லை ..
இரண்டே மாதத்தில் இனியொரு செய்தி.தன்னிடம் வளர்ந்த கடைசி செல்ல மகள் தனக்கொரு மகளை சுமக்கிறாள் என்று ..ஏறாத இடமெல்லாம் ஏறி ; காணாத காட்சியெல்லாம் கண்டு முடிவில் செய்தால் அவளுக்கொரு திருமணம்..
துன்பங்கள் எல்லாம் குடியேறிய மனதில் இன்பமாய் ஒரு ஒளிவிளக்கு ,, தன் மூத்த மகள் அரசு உயர் அதிகாரி என்று . ..தான் பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்தது என அவளிடம் திருமண பேச்சை எடுத்தாள்..அதற்கு பட்டதாரி மகளின் பதில் 'உங்களது திருமண வாழ்வை பார்த்து வளர்ந்ததில் ,எனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை.சமூக சேவை செய்வதையே விரும்புகிறேன் 'என்று.
மகளின் வார்த்தை சவுக்கடியாய் இறங்கியது..
மகன் தந்த வலியும்,மகள்கள் ததந்த வலியும் சுமையாய் மனதில் இருக்க இரவு அவளுக்கு நெருஞ்சி முள்ளாய் தான் இருந்தது ..
நினைவலைகளில் இருந்து மீண்ட அடி பட்ட மனம் அப்போதே அறிவுரை வழங்கியது ,, கணவனை சென்று பார்..வாழ்வில் வசந்தம் எனும் மாற்றம் வரும் என்று..

எழுதியவர் : உமா அஸ்வினி (20-Dec-15, 12:03 pm)
Tanglish : vaazhkai chakkaram
பார்வை : 650

மேலே