ஞாபகம் இருக்கா

ஒரு நாள் காலையில Husband அவசரமா
Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife கேக்குறா..
" டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா..?!! " (ஒரு Sec டக்னு யோசிக்கிறான்...
"இது நவம்பர் மாசம்..!! ஓ.. என் Anniversary..!!
எப்படி மறந்தேன்..?!! சரி., சரி.,சமாளிப்போம்..")
"என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!! Evening 5 மணிக்கு ரெடியா இரு.., வெளியே Dinner-க்கு போலாம்.. "
Husband Office கிளம்பி போயாச்சு.. 11.AM : Door Bell அடிக்குது.. கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு பொக்கே
வெச்சிட்டு நிக்கிறார்..
" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "
அவளுக்கு அதை பார்த்ததும் சந்தோஷம்..
1PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box
வெச்சிட்டு நிக்கிறார்..
"மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "
அதை Open பண்ணினா..,
எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates..
இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா..
3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது.. கதவை திறந்தா.. அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்.. "மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக அனுப்பினார்.. !!
அதை Open பண்ணினா ஒரு அழகான Diamond Necklace.. இப்ப அவ இன்னும் ரொம்ப சந்தோஷமாயிடுறா.. Husband எப்ப வருவார்னு ரொம்ப ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா.. 5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது.. அப்படியே ஓடி போயி அவரை கட்டி பிடிச்சிக்கிறா..
"என்ன டார்லிங்.. நான் அனுப்பின Gifts எல்லாம் பிடிச்சிருக்கா..? "
"ரொம்ப பிடிச்சிருக்குங்க.. "
"காலையில என்னமோ.. நான் மறந்துட்டேன்னு சொன்னியே.. எப்படி நம்ம Surprise..?!! "
"சூப்பர்ங்க.., World Men's Day-கே இப்படி
கலக்கிட்டீங்களே.. அப்ப அடுத்த வாரம்
நம்ம Anniversary-க்கு எப்படியெல்லாம்
அசத்த போறீங்களோ..!!! "
Husband " ??!!!!!
(Husband mind voice : அப்ப நானாதான் போய் சிக்கிட்டனா) சுட்டது

எழுதியவர் : செல்வமணி (25-Dec-15, 11:14 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 269

மேலே