நெருப்பு மனிதன்

நள்ளிரவு 12:00 மணிக்கு பிரேம்குமாருக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. தூக்க சோர்வில் செல்பேசியை எடுத்து பார்த்தான். எடிட்டர் என பெயர் வந்தது. பிரேம்குமார் ஒரு பத்திரிக்கை நிருபராக ஒரு பிரபல பத்திரிகையில் வேலை செய்பவன்.

பிரேம்குமார் காதில் கேட்ட விசயங்களை வைத்துக்கொண்டு உடனே நம்புகிறவன் அல்ல . எதனையும் அலசி ஆராய்பவன். சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டு பிடித்து மற்ற பத்திரிக்கைகளுக்கு முன்பாக இவன் பத்திரிக்கையில் எழுதிவிடுவான். இதனாலேயே இவன் வேலை செய்யும் பத்திரிக்கையின் ஆசிரியர் முக்கியமான சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அனுப்புவார்.

செல்பேசியை எடுத்துக் கொட்டாவி விட்டுக்கொண்டே காதில் வைத்து ஹலோ என்றான்.
"டேய் பிரேம் தூங்குனது போதும் ஒரு தற்கொலை கேஸ்டா உடனே அங்க போ" என்றார் ஆசிரியர்.
"சார் நடுராத்திரி பேய் எல்லாம் வாக்கிங் போற நேரம் சார் இந்நேரம் போக சொல்றீங்க" எனச் சலிப்பாக எழுந்தான் பிரேம்.
"டேய் சம்பவம் நடந்த இடத்த இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் எனக்கு அனுப்பிருக்கார் நான் உனக்கு sms பண்றேன் என்று கூறி செல்பேசி இணைப்பைத் துண்டித்தார் .
சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பக்கத்து ரூமில் தூங்கிக் கொண்டிருந்த நிழற் படம் எடுக்கும் சுரேந்தரை எழுப்பினான். "டேய் உன் கேமராவைத் தூக்கிகிட்டு வா நமக்கு வேலை வந்திருக்கு என்று கூறினான்.
அரைகொரை தூக்கத்தில் இருந்து விழித்த சுரேந்தர்"நயந்தாராவைப் பேட்டி கேக்கவா" என்றான் "நடுராத்திரி நயன்தாராவா? செருப்பு....... ஒழுங்கா என் கூட வாடா" எனக் கூறி வீட்டிற்கு வெளியே வந்தான்.
"டேய் வண்டிய ஸ்டார்ட் பண்ணு அதுக்குள்ள நான் சட்டையை மாத்திட்டு வாரேன்" என்று வீட்டிற்குள் இருந்து கத்தினான் சுரேந்தர்.
தனது இரு சக்கர வாகனத்தை உதைத்துப் புறப்படத் தயாரானான். அப்பொழுது ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதனைத் திறந்து பார்த்தான் அதில் அவர்கள் போகவேண்டிய இடத்தின்
விலாசத்தை அனுப்பி இருந்தார் பத்திரிக்கை ஆசிரியர்.
இருவரும் அந்த நள்ளிரவு நேரத்தில் அவர்கள் ஆசிரியர் அனுப்பியிருந்த இடத்திற்கு வந்தடைந்தார்கள்.
"சார் நான் தினச்செய்தி பத்திரிகையில இருந்து வந்திருக்கேன் என்றான்" பிரேம்குமார்.
"ஆமா...... மத்த பத்திரிக்கைக்கும் நான் போன் பண்ணிருக்கேன் அவங்க வரதுக்குள்ள நீங்க எப்படியா முதல்ல வந்திடுறீங்க. அது கெடக்கு, நல்ல நீட்டா போட்டாவை எடுத்து தந்திடுங்க க்ரைம் சீன " எனக் கூறி வீட்டிற்குள்ளே போகச் சொன்னார்.

வீட்டிற்குள் இருவரும் நுழைந்தனர் அங்கே 55 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி கதறி அழுது கொண்டிருந்தார்.

"இவங்கள எடுக்கவா" என்றான் சுரேந்தர்
"க்ரைம் சீன முதல்ல எடு அப்புறம் அவங்க கிட்ட போய் நடந்தத கேட்போம்" என்றான் பிரேம்
அப்பொழுது அங்கு வந்த போலீஸ்காரர் தம்பிகளா அந்த ரூம் என்று கையை நீட்டினார். அவர் நீட்டிய ரூமிற்குள் நுழைந்தனர் இருவரும்.
"பிரேம்.... தற்கொலைடா... இந்த மண்டையன் மண்டைய பாத்தியா செதர் தேங்காய் மாதிரி செதறி கிடக்கு என்றான்.
பக்கத்து அறையில் போலீஸ்காரர் " எம்மா எப் ஐ ஆர் போடணும் நடந்த சம்பவத்த சொல்லுங்க" என்றார்.
அழுகையை கஷ்டப்பட்டு நிறுத்திய அந்த பெண்மணி நடந்த சம்பத்தை சொல்ல ஆரம்பித்தார்

"சார் இன்னைக்கு நைட் 11:00 மணி இருக்கும் யாரோ காலிங் பெல்ல அழுத்தினாக யாருன்னு பாக்க என் கணவர் போனாரு. போனவர் திடீர்னு கத்திக்கிட்டு ஓடி வந்தார் அப்போ உடம்பெல்லாம் நெருப்பு எரிஞ்சுக்கிட்டு ஒரு உருவம்............." என கண்ணில் பயத்தோடு அமைதியானார் சிறிது நேரம் பேசவே இல்லை.
மீண்டும் சிறிது நேரம் கழித்து விவரிக்க ஆரம்பித்தார் ".அந்த உருவத்துக்கிட்ட என் கணவர் என்ன விட்டுடு விட்டுடுன்னு கதறினார்.பிறகு அந்த உருவம் என்ன முறைச்சு பாத்தது பயத்துல எனக்கு உடம்பையே அசைக்க முடியல.அப்புறமா அந்த அறைக்குள்ள போன என்கணவர் என்ன மன்னிசிடுமா எனக் கூறித் தனது கைத் துப்பாக்கியால் தன்னைச் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அத பாத்ததும் நான் மயங்கிட்டேன்" என அந்தப் பெண்மணி வாக்குமூலம் கொடுத்தார்.

இதைக் கேட்ட போலீஸ்காரருக்கு முகமெல்லாம் வேர்த்துப் போனது.

- தொடரும்

எழுதியவர் : மொழியரசு (29-Dec-15, 1:55 pm)
சேர்த்தது : மொழியரசு
Tanglish : neruppu manithan
பார்வை : 543

மேலே