அருண்-னா அரண்-னா

அருண்-னா அரண்-னா?
-------------------------
தம்பி, இங்க வாப்பா.

என்னங்க தாத்தா?

நீ நல்ல அழகான பையனா இருக்கற. உம் பேரு என்னப்பா?

எம் பேரு அருண், தாத்தா.

எனக்கு நீ சொன்னது சரியா காதுல விழல. உம் பேரு அரண்-னா? கொஞ்சம் சத்தமாச் சொல்லு.

இல்லங்க தாத்தா. எம் பேரு அருண்.

அருண்-ங்கறது தமிழ்ப் பேரு இல்லையே. சரி உம் பேருக்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?

எனக்கும் தெரியாது, அந்தப் பேர எனக்கு வச்ச என்னோட அம்மா அப்பாவுக்கும் தெரியாதுங்க தாத்தா.

சரி நாஞ் சொல்லறேன். அரண் -ங்கற தமிழ்ச் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருக்குது. அதுக்கு ஒரு அர்த்தம் மட்டும் சொல்லறேன். அரண்-னா கோட்டைன்னு அர்த்தம். அருண்-ங்கறது வடமொழி என்று சொல்லப்படும் சமஸ்கிருத மொழிச் சொல். அருண் -ங்கற சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் 'கதிரவன்'. அழகான பேரு. அந்தப் பேரையே உனக்கு வச்சிருக்கலாமே.

தாத்தா, என்னோட அம்மா அப்பா ரண்டு பேருமே பெரிய படிப்பு படிச்சவங்க தான். ஆனா ரண்டு பேருமே தீவிர சினிமா ரசிகர்கள். எதோ ஒரு சினிமாக் கதைல வர்ற நாயகன் பேரு அருண் -னாம். அந்தப் பேர எனக்கு வச்சிட்டாங்களாம்.

என்ன செய்யறது, தம்பி ? படிச்சவங்களுக்கு தாய் மொழி மேல பற்று இல்ல. திரை மோகத்திலே பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்க விரும்பறதில்ல. பாமர மக்களுக்கு மொழிப் பற்றைப் பற்றிச் சொல்லி புரிய வைக்க முடியுமா?

-----------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (2-Jan-16, 8:15 pm)
பார்வை : 696

மேலே