நெருப்பு மனிதன்

என்ன எட்டையா முகமெல்லாம் வேர்த்துக் கொட்டுது என்று சிரித்துக்கொண்டே கேட்டான் சுரேந்தர்.
அப்படியெல்லாம் இல்லை போட்டோவ எடுத்துடிங்கல்ல என்றார் ஏட்டைய
அதலாம் ஆச்சு ஆமா அந்த அம்மா சொன்னது உண்மையா இருக்குமா என்றான் பிரேம் ஏட்டாயாவிடம்
அப்போ உள்ள போய் நீ போட்டோவை எடுக்கல நாங்க பேசிட்டு இருந்தத ஒட்டு கேட்டுட்டு இருந்திருக்க
ஏட்டய்யா நான் பத்திரிகை காரன் கிட்டத்தட்ட போலீஸ் மாதிரி விழிப்பா இருக்கணும்லா என்றான் பிரேம்.
"சரி தம்பிகளா போட்டோவை காலைல பிரிண்ட் போட்டு எடுத்துட்டு வாங்க" என்றார்.
அவருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

"ஏன்டா பிரேம் இந்த பேய் பிசாசெல்லாம் இருக்கா" என்றான் சுரேந்தர்
"இருக்குடா " என்றான் பிரேம்
"ஏனடா சொல்ற நிஜமாவா?!" என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான் சுரேந்தர்
"ஆமா நீயே ஒரு பேய் தானடா" என்றான் பிரேம்குமார்
இருவரும் பேசிக்கொண்டே வீடிற்கு சென்றனர். வீட்டில் பிரேம் தான் எடுத்த நிழற்ப்படத்தையும் செய்தி தொகுப்பையும் ஆசிரியருக்கு அனுப்பி வைத்தான்.
மறுநாள் காலை 6.30 மணிக்கு பிரேம்குமாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பிரேம்குமார் அதனை எடுத்து பேசினான்.
"ஹலோ சார் காலை வணக்கம்"என்றான் பிரேம்
"வணக்கம் இருக்கட்டும் ஒரு பிரச்சனை உடனே சிவானந்தா காலனிக்கு போ" என்றார் ஆசிரியர்
"என்ன விஷயம் சார் மறுபடியும் ஏதாது முக்கிய செய்தியா?" என்றான் பிரேம்
"எஸ் நேத்து நள்ளிரவு நடந்த மாதிரி மறுபடியும் ஒரு கொலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெருப்பு மனிதன் கொலைபன்னுனதா வாக்குமூலம் கொடுதிருகாங்கனு சொன்னார் சீக்கிரமா அங்க போ" என்றார் ஆசிரியர்
"டே சுரேந்தர் சீக்கிரம் கிளம்பு நமக்கு வேலை வந்திடுச்சு"என்றான் பிரேம்குமார்
- தொடரும்

எழுதியவர் : மொழியரசு (4-Jan-16, 3:27 pm)
சேர்த்தது : மொழியரசு
Tanglish : neruppu manithan
பார்வை : 252

மேலே