வரவேற்க தயாரா

வரவேற்க தயாரா ?
கல்வியா, செல்வமா, வீரமா இவற்றில் எது வேண்டு என்று கேட்டால், எல்லோரும் செல்வத்தைத்தான் தேர்வு செய்வார்கள்.

அப்படிப்பட்ட செல்வம், நம் இல்லத்தில் சேர வேண்டுமானால், என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது. பார்ப்போமா !

”செந்தமிழ்நூல், வெற்றிலைப்பாக்கு, திருநீறு, பல்லக்கு, தங்க ஆபரணம், அடை மற்றும் அழகிய மங்கை இந்த ஏழும் நம்மைத் தேடிவந்தால்,மறுக்காமல் இருகரங்களால் ஏற்கவேண்டும். இந்த கருத்தைத்தான் தனிப்பாடலாக நம் முன்னோர்கள் நமக்கு வழங்கி உள்ளனர்.

”செந்தமிழுடையதாய் நீறுசீவிகை பொன்னாரம் ஆடை
சுந்தரமான தோகை துலங்குமின் வகைகளேழும்
வந்தபோது இருகையேந்தி வாங்க லக்குமியும் சேர்வாள்”

ஏற்க வேண்டியவை பார்த்தோம், ஏற்க கூடாதவை உண்டு அல்லவா, அதையும் பார்ப்போமே!

இஞ்சி, நெல்லிக்கனி, பாகற்காய் கறி, கீரைவகைகள், தயிர் இவைகளை இரவில் உணவாக ஏற்க கூடாது. ஏற்றால் லட்சுமியின் மூத்தவள் அழையாவிருந்தாளி ஆவாள். இதைத்தான் …பாடலாக வழங்கி உள்ளனர்.

இஞ்சி நெல்லியிலைக்கறி பாவற்காய்
கஞ்சி வெண்டயிர் கங்குலருந்திட
கொஞ்சுபூமகள் போயுடன் மூத்தவள்
கொஞ்சி கொஞ்சி குலாவி நடிப்பளே”

முடிவு உங்கள் கையில்…….
வரவேற்க தயாராகுங்கள், செல்வத்தின் அதிபதியான லட்சுமிதேவியை….!

-----கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (4-Jan-16, 10:02 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 117

மேலே