வாழும் நீர் எங்கே

வாழும் நீர் எங்கே, பெரியப்பா?

ஏண்டா முத்து, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? வாழும் நீர் எங்கேன்னு கேக்குறயே? நல்ல தண்ணி, கெட்ட தண்ணி, குடி தண்ணி இல்லன்னா குடி நீர், வெந்நீர்-ன்னு தான் சொலுவாங்க. நீயென்னடான்னா வாழும் நீர் எங்கே-ன்னு கேக்குறது நல்லாருக்கா?

பெரியப்பா நா வாழும் நீர் அக்கா எங்கேன்னு தான் கேக்குறேன்?

யாருடா அது வாழும் நீர் அக்கா? நம்ம வீட்டில யாரும் அப்படி இல்லையே!

பெரியப்பா நா சுதா அக்காவைத் தாங் ’வாழும் நீர்’ அக்கா-ன்னு சொல்லறேன்.

அதென்னடா ’வாழும் நீர்’ -ன்னா?

சரி சுதா அக்கா பேரு தமிழ்ப் பேரா?

அதென்னவோ எங்களுக்கென்னடா தெரியும்?

சரி அந்தப் பேர அக்காவுக்கு ஏன் வச்சீங்க?

அட ஒரு சினிமாக் கதையில வர்ற கதாநாயகி பேரு சுதா. அந்தப் பேரு எனக்கும் உம் பெரியம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதனால தான் ஒம் அக்காவுக்கு அந்தப் பேர வச்சோம்.

சரி அந்தப் பேருக்கு என்ன அர்த்தம் (பொருள்)ன்னு தெரியுமா?

அட போடா. யாருடா பேருக்கு அர்த்தமெல்லாம் பாத்துட்டு பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறாங்க?

பெரியப்பா, சுதா -ங்கற பேரு வடமொழியிலெயும் இந்தியிலெயும் இருக்கற பேரு. அதுக்கு அர்த்தம் “வாழும் நீர்”

==============================---------------------------------------------------------------------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
===========================================
============================================
நன்றி: விக்கிபீடியா: Sudha (Hindi : सुधा) is a Hindu/Sanskrit Indian popular feminine given name, which means "living water".
===================================================================================================

எழுதியவர் : மலர் (7-Jan-16, 11:05 pm)
Tanglish : vaazhum neer engae
பார்வை : 150

மேலே