மிஸ்டு காலும் மிஸ்ஸஸ் காலும்

ஒருவர் தொலை பேசியில் மனைவியிடம் பேசுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

* தொலைபேசியில் பேசும் போது அதிகம் தான் பேசாமல் அடிக்கடி உம்...ஆமா
...உம் ..என்று அடிக்கடி மெல்லிய சிரிப்பும் சிரித்தால்,
மச்சி இப்பதான்..."யாருக்கோ நிச்சயம் பண்ணியிருக்கு" என்று அர்த்தம் ..

* என்ன டார்லிங் இவளவு நேரம் ஏன் ..? போன் பண்ண*ல ..என்றால் திருமணம் ஆகி ஒருமாதம்.

*சாரிடா செல்லம்... டைம் கிடைக்கல. ஒரே பிசி...என்றால் திருமணம் ஆகி ஒரு வருடம் ..

*வீட்டில் இருந்து வெளியேறும் போது மனைவியிடம், இன்று நான் உனக்கு போன்
பண்ண மாட்டன் ஏன்னா ..? மீட்டிங் இருக்கு ..என்று சொன்னால் திருமணம் ஆகி
ஒரு இரண்டு | மூன்று வருடம் ....

*மனைவி "போன்" செய்தால்... என்ன ..? இப்ப ஏன் போன் பண்ணின* ..? வீட்டுக்குதான* வருவேன்...செத்தாபோயிடுவன் என்ன அவசரம் ...?
என்று கத்தினா திருமணம் ஆகி ஐந்து |ஆறு வருடம் ..

*அங்கேயிருந்தும் போன் வர்றதில்லை... இங்கேயிருந்தும் போன் போறதில்லை...

அப்படின்னா வருடம் 10க்கு மேல!

எழுதியவர் : செல்வமணி (10-Jan-16, 1:02 am)
பார்வை : 471

மேலே