நிஷா - இரவு

இந்த அநியாயத்தை யாருகிட்டப் போய்ச் சொல்லறது?

என்ன அநியாயம் நடந்திருச்சின்னு சத்தம் போடறே?

நா அப்பவே சொன்னேன். நம்ம பொண்ணுக்கு நிஷா-ன்னு இந்திப் பேரு வைக்காதிங்கன்னு. எம் பேச்சக் கேட்டீங்களா?

என்னடி சொல்லற காமாட்சி?

நீங்க இந்திப் பெயர் மோகத்திலே நம்ம பொண்ணுக்கு அர்த்தம் தெரியாமலே நிஷா-ன்னு பேரு வச்சிட்டீங்க. அவ நல்ல செவப்பா அழகா இருக்கறா. அவ என்ன இருட்டுக் கட்டின மாதிரி கருகிப் போயாக் கெடக்கறா? கொழந்தையிலெ இருந்ததைவிட நல்லா நெறமாத் தானே இருக்கறா?

அதுக்கென்னடி இப்ப?

எதோ ஒரு சினிமாவ்லே வர்ற உங்க அபிமான கதாநாயகி பேரு உங்களுக்குப் பிடிச்சுப் போச்சுன்னு அவளுக்கு நிஷா-ன்னு பேரு வச்சீங்களே, அந்தப் பேருக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா மாமா?

அட நிஷா -ங்கற அந்த அருமையான பேருக்கு என்ன அர்த்தமா இருந்தா உனக்கென்னடி. அந்தப் பேர சொல்லறதுக்கு அழகா இருக்குதே அது போதாதா? அந்தப் பேரோட அர்த்தம் பத்தியெல்லாம் ஏண்டி கவலப்படற. காலத்துகேத்த கோலண்டி. இந்திப் பேர வைக்கறது தான் இன்றைய நாகரிகம்.

நாசமாப் போச்சு. இன்னிக்குத் தான் ஒரு இந்தி வாத்தியார்கிட்ட ‘நிஷா”-ங்கற பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அதுக்கு ‘இரவு”-ன்னு அர்த்தமாம். ஏங்க பெத்த பிள்ளைக்கு யாராவது இரவு-ன்னு பேரு வைப்பாங்களா?

அட எழவே. நெறையப் பேரு அந்தப் பேரத் தாண்டி அவுங்க பிள்ளைங்களுக்கு வச்சிருக்காங்க. அட சனியம் பிடிச்ச எழவே, அர்த்தம் தெரியாமலே நா அந்த்ப் பேர எம் பொண்ணுக்கு வச்சிட்டேன். இன்னிக்கே (நோட்டரி பபளிக்) வழக்குரைஞர்கிட்ட சொல்லி நம்ம பொண்ணுக்கு நல்ல தமிழ்ப் பேரா வச்சு (கெஜட்) அரசிதழ்ல் வெளியிடணும். என்ன மன்னிச்சுக்க காமாட்சி. சினிமா மோகத்திலெ நா நம்ம பொண்ணுக்கு அர்த்தம் தெரியாம ’இரவு’-ன்னு பேரு வச்சிட்டேன்.
======================
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: விக்கிபீடீயா:
Nisha, meaning "night" in Sanskrit (निशा, nishā), is an Indian female given name

எழுதியவர் : மலர் (16-Jan-16, 2:01 pm)
பார்வை : 541

மேலே