இன்றைய வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்தவம்

பொருளடக்கம்:-

* முன்னுரை

* மொழிபெயர்ப்பு

* வரலாற்று நிகழ்ச்சிகளும், இன்றைய நிலையும்

* தமிழ் பேராசிரியர்களும், படைப்புகளும்

* மென்பொருளாலர்கள்

* தமிழை அதிகரிக்க என்னென்ன வழிகளை கையாள வேண்டும்

* வலைதளங்கள்

* புதிய முயற்சிகள்

* பெருமை கொண்ட கலாச்சாரம்

* பொறுத்திரு தமிழ் வாழம்

* தமிழ் வளர்க்க

* முடிவுரை

முன்னுரை :-

கடந்த சில வருடங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதன் வாழ்க்கை நிலை முற்றிலுமாய் மாறிவிட்டது. எந்த சேவைகளானாலும் வலைதளங்களின் உதவி கொண்டு மிக எளிமையாகவே தன் தேவைகளை பெற விரும்புகிறார்கள். தமிழோ ஒரு கடல் தன் தேவைக்கேற்ற நூலை நூலகத்திற்குச் சென்று தேடிப்பெறுவது என்பது அத்தகைய எளிதன்று. அதனை வலைதளங்கின் துணைக் கொண்டு தேடிப்பெறுவது என்பது மிகவும் சுலபமானவை, இன்றைய வாழ்க்கைக்குகந்த தமிழை வளர்க்கும் செயலாகும். அதன், அடிப்படையில் தமிழுக்கென்று சில வலைதளங்களை உருவாகி தமிழை வளர்ப்பது சிறப்பாகும்.

மொழிபெயர்ப்பி:-

ஒரு தகவலை ஆங்கில எழுத்து வடிவில்பெற விசைப்பலகை வாயிலாக பெறுவது எளிதாகும். தமிழில் அவ்வாறு செய்ய இயலாது என்ற நிலையை மாற்றி தமிழ் பேச்சிலும், மூச்சிலும் மட்டும் வாழவில்லை எழுத்தளவிலும் என்றும் வாழும் என்பதற்காகவே தமிழ் மொழிபெயர்ப்பி மென்பொருள்கள் பல வந்துவிட்டன. படைப்பாளிகள் தங்கள் வாசகங்களையும், பிற படைப்புகளையும் "தங்கிலிஷ்"- யில்

எழுதுவதை தவிர்த்து அழகு தமிழிலே தகவலை தந்து தமிழ் எழுத்துகளின் முக்கியத்துவத்தை நிலை நாட்டுகிறார்கள்.

வரலாற்று நிகழ்ச்சிகளும், இன்றைய நிலையும்:-

வால்மீகி எழுதிய இராமயணத்தை கம்பர் தமிழில் வழங்கும் போது தமிழ் பண்பாட்டுக்கும், தமிழர் சிறப்புக்கும் பொருத்தமான மாற்றங்களை அமைத்தே எழுதினார். உதாரணமாக "வீபீஷணன்" என்னும் கொச்சை எழுத்துக்களை அகற்றி "வீடணன்" என்றே வழங்கினார். இவ்வாறு பெயரில் மட்டுமல்லாமல் பிற மொழிச் சொற்களை தவிர்த்து தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டே எழுதினார்.

அதுபோன்றே இன்றும் தமிழ் பற்றுக் கொண்டவர்கள் விஞ்ஞான சொற்கள் அதிகமாக ஆங்கிலத்தில் உருவானாலும் அந்த சொற்களுக்கு பொருத்தமான தமிழ் இனைச்சொற்களைத் தந்து தமிழின் பெருமையை நிலைநாட்டுவது சிறப்பான செயலாகும். மொழியின் வளர்ச்சியை நிர்ணைப்பது காலத்திற்கேற்ற புனிதமாகும். அது தமிழர் உணர்ந்து பணியாற்றுவது சிறப்பாகும்.

தமிழ் பேராசிரியர்களும், படைப்புகளும்:-

தமிழின் இனிமையை உணர்ந்தவர் எவரானாலும் அதன் பெருமையை புகழ் பாடாமல் இருக்க இயலாது. அத்தகைய அமுத தமிழை பருகிய தமிழ் பேராசிரியர்களும், படைப்பாளிகளும் அதன் பெருமையும், சிறப்பையும் கல்வி வாயிலாகவும், எழுத்து வாயிலாகவும் தமிழின் இனிமையை தமிழிலே கற்பித்து தமிழுக்கு பெருமை சேர்த்து, எதிர்கால இளைஞர்களுக்கு தமிழ் ஆர்வத்தையும், தமிழின் பெருமையை புகட்டி என்றும் தமிழ் வளர்ச்சிக்கு காரணமாக அமைப்பவர்கள் அவர்களே. அவர்கள் தரும் தாய்மொழியின் முக்கியத்துவம் என்றும் வளர்ச்சிக்கு வித்தாக இருக்கும்.

மென்பொருளாலர்கள்:-

என்னதான் கணிப்பொறி கல்வி கற்று மாதம் கை நிறைய சம்பாதித்தாலும் நம்மவர்கள் இயற்கையும், தமிழின் சிறப்பையும்

அறிந்தவர்கள் ஆயிற்றே. அவர்களில் சிலர் தமிழுக்கான சேவைகளை செய்வது பெருமைக் கொள்ள வேண்டியதாகும். எழுத்தாளரும், விஞ்ஞானியுமான சுஜாதா அவர்கள் எத்தனையோ புத்தகங்களும், திரைக்கதைகளும் எழுதி இருந்தாலும் அவரை எழுதிய புறநானூறு பொருளுரையும் ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் இருப்பத்தகங்களும் அவரின் தமிழ் புலமையும், தமிழ் ஆர்வத்தையும், தமிழ் சேவையையும் வெளிக்காட்டுகிறது.

இதுபோன்ற முயற்சிகள் பலதுறையை சார்ந்த படைப்பாளிகள் செய்து வருவது அவர்கள் அவர் தாய் மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது. முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் தமிழுக்கு, நாட்டிற்கும் தேடி தந்ந பெருமை இன்றைய இளைஞர்கள் உள்ளத்தில் ஆழமாக உள்ளது. அவர் மீது அவர்கள் கொண்ட பற்று தமிழ் மீதும், தமிழர் மீதும் அவர்கள் கொண்ட அன்பே தமிழின் பெருமை வளர்க்கும் சிறப்பாகும்.

தமிழை அதிகரிக்க என்னென்ன வழிகளை கையாள வேண்டும்:- இவ்வாறாக ஒருபக்கம் தமிழை வளர்ப்பவர்கள் இருந்தும் மறுபக்கம் தமிழ் பெருமையை என்னாத பல பெற்றோர்கள் உள்ளனர். பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதை ரசிக்க பல பெற்றோர்கள் இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து ஆங்கில வழி கல்வி தருவதோடு, வீடுகளிலும் பெரும்பிலும் ஆங்கிலம் பேசுவதே கடைபிடுக்கிறார்கள். இவ்வாறு இருக்க தாய்மொழி ஆர்வம் எங்ஙனம் வரும். தாய்மொழி ஆர்வத்தை வளர்க்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை மற்ற பாடங்களைப் போலவே தமிழுக்கும் முக்கியத்துவம் தரலாம் அல்லவா. இவ்வாறு தந்தால் ஒழுக்கமும், பண்பாடும் நாகரீகத்தின் பெருமையும், நம்மவர் சிறப்பையும் உணர்ந்து வாழ முடியும். தமிழை வளர்க்க முதலில் பள்ளிகளிலிருந்தே தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

வலைதளங்கள்:-

வலைதளங்களின் வாயிலாக தமிழ் வளர்ச்சியுற்றிருந்தாலும் அதன் பயன்பாட்டின் விகிதம் குறைவாகவே இருக்கிறது காரணம் தமிழை நேசிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் அதனை பயன்படுத்தவில்லை. தமிழ் வலைதளங்கள் எத்தனை இருக்கும் என்பதைவிட அதனை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தானே பெருமை உள்ளது.

அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர்கள் ஏன் அரசனை புகழ்வதை முதன்மையாகக் கொண்டார்கள். அப்படி செய்தால் அன்றோ அவர்களுக்கு பாடல்கள் எழுத ஊக்கத்தொகையும், நாட்டின் பெருமையும், அன்றைய வரலாற்று நிகழ்வுகளை பதிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுபோன்றே இன்றும் தமிழ் வளர்க்க சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. முதலில் இன்றைய தேவைகளையும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான தகவல்களை தமிழ் வலைதளங்களின் வாயிலாக அன்றாட வழங்க வேண்டும். நல்ல கற்பனை எளிமையான கவிதைகள், நகைச்சுவைகள் தமிழ் எழுத்து வடிவில் வழங்கிய படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

நல்ல கவிதைகளையும், வரலாற்றுக் கதைகளையும், சங்க இலக்கியங்களையும் பெருமளவில் பிரபலமடைந்த புத்தகத்தின் எழுத்து வடிவங்களையும், ஆராய்ச்சி சார்ந்த கதைகளையும் வலைதளங்கள் வாயிலாக அன்றாட வழங்க வேண்டும். நல்ல எழுத்துதிறன் கொண்டு வளரும் எழுத்தாளரின் படைப்பை படிப்படியாக வெளியிட வேண்டும். இதையெல்லாம் செய்வதால் படைப்பாளர்களுக்கு புதுமையான படைப்புகளையும், தேவைக்கேற்ற படைப்புகளை தமிழில் தருவதோடு பல வாசகர்களின் மனதில் தமிழ் எழுத்து ஆர்வத்தை கொண்டு சேர்த்து விடுவார்கள்.

புதிய முயற்சிகள்:-

சில தினங்களுக்கு முன்பு (வாட்ஸ்ஆப்) குழுவில் ஒரு எண்ணை இணைப்பதன் மூலம் விக்கிபீடியா தொடர்புடைய தகவல்களை அன்றாடம் வாட்ஸ்ஆப்-ல் வருவதும் தேவையான செய்திகளை எளிதில் தேடிக்கொள்ளவும் முடிந்தது. இதுபோன்ற ஒரு சேவையை தமிழில் தரவேண்டும். வலைதளங்களில் இணைப்பதோடு இதுபோன்ற புதிய முயற்சிகள் பலரிடம் தமிழ் வலைதளங்களை அறிமுகப்படுத்தும். இதன்பொருட்டு தமிழ் படிக்கும் ஆர்வமும், தமிழ் சேவையும், தமிழ் வாசகர்களும் அதிகரிப்பார்கள்.

பெருமை கொண்ட கலாச்சாரம்

தமிழ் மொழி இன்றும் உயிர் மூச்சாக தான் இருக்கிறது,ஆனால் ஏனோ வெளிநாட்டின் உடைகளைப்போல மொழியினையும் கட்டி அழுகின்றனர்.

நினைத்து பாருங்கள் பெண்கள் வண்ண பறவைகள் போல தாவணி மற்றும் சேலை அணிந்தும்,ஆண்கள் பார்த்தாலே தமிழ் வீரம் தெரியும் வேஸ்ட்டி அணிந்தும்,வார்த்தைகள் அது அமுதம் சொட்டும் வாயினிலே.இன்றோ அழகாம் சுடிதார்,மிடி,ஜீன்ஸ்.கேட்டால் தாவணி,சேலை அங்கங்கே தெரியுமாம் கட்டினால்,ஆனால் மற்ற ஆடைகள் அடக்கமாம்.அட அறிவிழியே நாம் கட்டிய தாவணி,சேலை நம் உடலின் சூட்டை தணிக்கும் வன்னம் கட்டுவர்,குழந்தை அது கரு உருக்கொள்ளும் முன்னும் கரு வளரும் போதும் அழுத்தம் இல்லாது,இயற்கையோடு உறவாட சேலை அது இடுப்பினில் காற்றை இழுத்திடுமே.கட்டும் நம் கையில் தான் உள்ளது அடக்கம் என்பது.வேஸ்ட்டி கட்டினால் சௌகரியம் இல்லையாம் நினைவில் கொள் அன்று வீர விளையாடும்,வேலை வயலிலும்,இறங்கும் ஆற்றிலும் பலவிதமாய் கட்டி இரங்குவர் களத்தினிலே இன்று நீ அணிந்திருக்கும் நீட் காற்சட்டை கொண்டு என்ன செய்வாய் நீர்பாய்,அமர்வாய்,நடப்பாய் அது தானே ?

அழகும்,அமுதும் ததும்பும் நம் மொழியினை நம்மால் காக்க இயலும்.ஆனால் அது வெறும் கட்டுரையின் தொகுபினாலோ,வார்த்தை வடிவினாலோ அல்ல நம் செயல்முறையினாலே ஆகும்.ஒவ்வொரு தமிழனும் அதற்கு துணை நின்றாலே ஆகும்.சிந்தியுங்கள் நம் மொழி எங்கனம் அழகும்,நயமும் உள்ளதென்று.சாரமற்ற உப்பு உணவிற்கு சுவையுட்டுமோ ? அது போன்றதே வெளிநாட்டவர் மொழியும் அதில் சாரமில்லை பொருளுமில்லை.சாரமும்,சுவையும் உள்ள நம் மொழியை சுவைத்து பாருங்கள்.வண்ணமயமாகும் பூ பூமியை.

எனக்கு ஒரு கேள்வி உண்டு.நம் நாடு என்று பிறமொழியினை வாழ்வாதாரமாக நினைக்க தொடங்கியது ? அரசர்கள் ஆண்ட காலத்தின் முன்பும் வெளிநாட்டினர் நம் நாட்டை பார்வையிட வரவில்லையா ? வணிகம் கூட செய்தனரே பின்பு என்று நாம் அவர்கள் மொழியினை கற்றாலே வாழ்க்கை செழிக்கும் என்ற நிலைக்கு வந்தோம் ? அன்று நம் நாட்டில் வணிகம் உறவு வைக்க அவர்கள் நம் மொழியினை அல்லவா பயின்று உரையாடினர் அதில் என்று நாம் அவர்களிடத்தில் சாய்ந்தோம் ? தலை சாயாது நிமிர்ந்து வாழ்ந்த நம்மை சாய்த்தது எது ?

சிந்தித்தோமா ? காரணம் வெளிநாட்டவன் விரித்த வலையிலே புத்தியற்ற மீன்களைப்போல் காட்டிய பொருள்,ஆடை,பழக்கம் என அனைத்தையும் புதிதாய் கிடைத்த வைரமென்று அணிந்துக்கொண்டோம் இன்று அதுவே நமக்கான சங்கிலியாய் நம்மை இருக்கிவிட்டது.இன்று நமது சுயத்தை

இழந்து மொழியின் சுவையும்,கலைகளின் பெருமிதமும் மறந்து பித்தர்களாய் அவன் ஆட்டும் பொம்மைகளாய் ஆடுகிறோம்.

தாய்மொழி தாயினை போல காக்க வேண்டிய ஒன்று.அதனை இன்று தரணியில் அழிக்க நினைக்கும் நாம் நம் தாயினையே அழிப்பதை பொருள்.

" அன்பும் அறமும் " என்று வாழ்ந்த காலம் இன்றோ " பணமும் சினமும் " ஆக உள்ளது.இதனை மாற்ற வழி இருந்தும் நம்மால் நம்மையே காத்துக்கொள்ள கூட தெரியாத வன்னம் தமிழின் சிறப்பும்,அழகும் அறியாதவாறு உள்ளோம்.இந்த அவல நிலை நம் மொழிக்கு இன்று இது தொடரந்தால் நாளை நமக்கும்.

பொறுத்திரு தமிழ் வாழம்

முனேற்றம் என்று சுற்றி சுற்றி நாம் கண்டு பிடித்த அனைத்தும் நம் வழிமரபினரின் மருந்துகளான அனைத்தையும் அழித்து நோய்,சிரழிவு வரவழைத்து பின்பு அதற்கு மாத்திரை என ரசாயனத்துடன் மருந்தும் தாயரிக்கின்றோம்.அதற்கு நாம் எதனையும் கண்டுபிடிக்காது சுக வாழ்க்கையினை வாழ்ந்திருக்கலாமே.சிந்தியுங்கள் நாம் அன்று சமையல் செய்ய மிக்சி,கிரைண்டர் உபயோகித்ததில்லை எனவே தான் உடல்சோர்வு,ஆரோக்கிய குறைவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர்.நம் வார்த்தைகள் எவ்வளவு இனிமையானது.அரசர்கள் புகழ்பாட்டு,கவிதை என புலமை பெற்றவர்களுக்கு பரிசளிப்பார் காரணம் அதனை கேட்க கேட்க மனம் மகிழும்,இதயம் மலர் போன்று மலர்ந்தெலும்.

அழிவுகளை சீர்படுத்தி அமைதி செய்ய பல வழிகள் உண்டு.ஆனால் அதற்கு முன்பு நாம் அனைவரும் தமிழினை நாடி,அதன் அமுதத்தினை சுவைத்து உணர வேண்டும்.என்றோ காணும் திருவிழாப்போல் நமது தமிழ் பாடல்,கவிதை,கதை,நூல் என ஆனந்தம் கொண்டு " நான் தமிழனடா " என்று மார்தட்டி கொள்ளலாகாது.சுவைத்து எடுத்து பகிர்ந்து மெருகேற்றுங்கள்.பின்பு தானே தமிழ் வளரும்.

இணையத்தளம் கண்டுபிடித்தது சிறப்பு.அதனால் பல செய்திகளும்,புத்தங்களும் பகிர்ந்து படிக்க உபயோமாய் உள்ளது.ஆனால் அதில் அவலம் நமது தேடல் தமிழில் அல்லாமல் பிற மொழிகளில் அதிகம் உள்ளது.தேடுதல் தமிழானாலும் அதனை கண்டுபிடிக்க செய்யும் உள்ளீடு ஆங்கிலத்தில் தர வேண்டி உள்ளது.அப்பொழுதே சரியான இணையினை காண முடிகிறது.எடுத்துக்காட்டாக சொல்கிறேன் எனக்கு

தமிழ் திருக்குறள் புத்தகம் வேண்டுமென்றால் உள்ளீடு தமிழில் கொடுத்தால் இணை சரியானதை வரவேண்டுமல்லவா ஆனால் வரவில்லை, இதே உள்ளீடு " Thirukkural Book " என்று தேடினால் சரியான இணை கிடைகிறது.இதனை மாற்றி தேடல் எதுவாயினும் உள்ளீடு தமிழில் தான் தரவேண்டும் அப்பொழுதே சரியான இணை கிடைக்கும் என்றால் பிரமொழியினரே உள்ளீடு நிமித்தம் தமிழினை கற்க கூடுமே.

மற்றொரு வழியும் உண்டு நாம் அதிகம் இன்று பிறமொழியினை பிடித்திருப்பதுவேலையின் பொருட்டே அதிகம்.வேலை உள்நாட்டிர்க்காய் இல்லாமல் இங்கிருந்து வெளிநாட்டிர்க்காய் உழைக்கவே, அவனுக்கு புரியவைக்க, பேச, உரையாட நாம் அவன் மொழியினை கற்று நம் மொழியினை தள்ளிவிட்டோம்.இதனை மாற்ற முதலில் நம் நாட்டில் உழைக்க வழி தேட வேண்டும்.இந்நாட்டவர் அவரது மொழியினில் உரையாடி அவனை நம் மொழியினை கற்று உரையாட,விமர்சிக்க வழிவகுக்க வேண்டும்.இதனை நாம் செய்தால் வெளிநாட்டவன் நம்முடன் வணிகம்,வேலைகள் பல, இன்னும் அதிகமான சார்புடைய வேலையினிமித்தம் மாறி நம் மொழி சிறக்கும்.

" என்னிடம் பேச வேண்டும் என்று நீ நினைத்தால் தமிழில் உரையாடு " என்று நாம் மௌனம் கொண்டால்.நம்முடன் உரையாடவே தமிழினை கற்றுக்கொள்வானே.அதனை தவிர்த்து நான் உன்னுடன் பேச வேண்டும் என்று பிறமொழியினை கற்று பின் செல்வானானால் அவனே தமிழுக்கு முதல் எதிரி.உன்னால் பேசாது இருக்க இயலாத தமிழினை மதிக்கவும் கற்றுக்கொள்ளவும் ஆசைக்கொல்லாத மனிதனிடம் உனக்கு என்ன கொடுக்கல் வாங்கல்.அமைதிக்கொள் உனக்காய் அவன் வருவான் ஒரு நிலையில் அதுவரை பொறுத்திரு தமிழ் வாழும்.

தமிழ் வளர்க்க

முதலில் தமிழினை வளர்க்க நாம் கட்டும் தளம்,அது உன் அருகினில் இருப்பவன் உன்னுடன் இருக்கையில் தமிழ் பாடல் அன்றி பிறமொழி பாடலை உருகி உருகி கேட்டு கழுதை போல கனைபானானால் அவன் கன்னத்தில் அறைந்து தமிழுக்கான உன் ஒப்பாரியை நிறுத்து என்றுரையுங்கள்.நாம் உருக்கொடுத்த நம் இசையினை அவன் மொழியினில் பாடிய பாடலை உருகி கேட்கும் மூடனே.கேளடா நம் இசை நம் மொழியினில்.நாம் உருகொடுத்த நம் பிள்ளை இனொருவரிடம் சென்று தாய் தந்தை என்று உறவாடினால் உன்னால் மகிழ்ச்சியுற முடியுமா ? பின்பு எங்கனம் நம் தாய் மொழி ,தமிழ்நாட்டினர் உருகொடுத்த

இயல்,இசை,நாடக்கத்தினை பிற மொழியின் வழியே சுவைக்க துடிக்கிறாய்.

வழக்கத்தின் அழகாய் யாரையேனும் பார்த்தால் வணக்கம்,நல்வரவு என்றும் செல்கையில் உங்களுக்கு நன்றி,சென்று வாருங்கள் என்றும் இருக்கை கூப்பி சொல்லுங்கள்."Hi ,bye "என்ற சொல்லினை மாற்றுங்கள்.அது என்ன hi - வா,bye -போ .இது என்ன மாடுகளை பழக்கும் புது விதமா ? பண்போடு சொல்லி தந்த நம் மொழியினை தூக்கிலிடும் வன்னம் நம்மை நமக்கே எதிரியாக்கும் பிறமொழி வார்த்தைகள்.சிந்தித்து செயல்பட நமக்கு அறிவில்லை என்று பிறமொழியினர் நினைக்கும் வன்னமே நாமும் செயல்படுகிறோம்.உன் வாயினால் பணிவோடு இருக்கை கூப்பி நல்வரவு என்றுரைத்துப்பார் எதிரியும் உன்னைக்கண்டு உளம் கனிந்து மன்னிப்பை கேட்ப்பான்.

தாய் மொழி தமிழ்

"தமிழன் என்று சொல்லடா,தலைநிமிர்ந்து நில்லடா " என்பதனை மறந்து பிறமொழியின் முன்னே உன் தலையினை தாழ்த்துகிராயே இதற்கு கயிற்றில் தொங்கி இருக்கலாம்.வேலைக்கான சுயவிவரத்தில் உள்ள தெரிந்த மொழிகளில் முதலில் தமிழ் என்று பதிப்பதால் வேலை கிடைப்பது கடினமாம் ஆங்கிலம் என்று பதித்தாலே வேலையாம்.கேட்ட உடனே இருந்த கொஞ்ச நினைப்பும் தூலாகி வேலையே தேவையில்லை என்று அப்படி ஒரு பதிப்பிர்க்காய் என்றுரைத்தேன்.உன் சுயத்தையே மாற்றும் ஏன் ?உணர்விற்காக,பணத்திற்காகவா ?.இதனை கேட்ட உடனே தோன்றும் இங்ஙனம் பேசுகிறாயே வேலையின்றி பணமின்றி உன்னால் வாழயியலுமா என்ன எங்கனம் வேலை கிடைக்கும் என்று.சரிதான் இன்று எவன் சுயத்தை இழக்கிறானோ அவனுக்கே மதிப்பு.ஆனால் இவ்வாறு மாறியது எப்பொழுது அதனை சீரமைப்பது எப்படி என்று சிந்திக்க மனமில்லையே அதனை உணர்ந்திரா ?

இவ்வாறு நாம் இன்று வாழ்ந்தால் போதும் என்று நம் சுயத்தை இழப்பதாலே நமது சுயம்,மொழி, அனைத்தும் புதைந்து மண்ணோடு மண்ணாகிறது.இனியும் இப்படியே இருந்தால் நமக்கு பின் உள்ள சந்ததியினர் மொழி அறியாது பிற மொழியினை தாய் மொழியாக கொள்ளும் அவலம் வந்துவிடும்.நமது மொழி இப்பொழுது பல இடங்களில் என்ன நம் உடன் இருப்பவனே எவ்வாறு பார்க்கின்றான் தெரியுமா ? நாம் தமிழ் மொழியின் அமுதத்துடன் பேசினால் கிடைக்கும் பதக்கம் என்ன

தெரியுமா ? " அவனா பித்தனடா,இவன் பிள்ளைகள் பாவம் தினமும் தமிழ் கற்றுக்கொடுத்தே சாகடிப்பான் " இதுவே பதக்கம் தமிழனுக்கு தமிழனாலே.

எனக்கு ஓர் ஆசை உண்டு சுற்றி வயல்வெளியும்,மரங்களும் கொண்டு மரங்களின் கிளையில் ஊசல் ஒன்று கற்றி ஆடவும்,இயற்கையின் நடுவே சிறு வீடுக்கட்டி,வீட்டில் முத்தம்,கிணறு,பல பூ செடி வைத்து ஓவியம் போல் வாழ ஆசை.இருந்தும் முடியவில்லை ஏனென்றால் வயல்வெளிகளும்,மரங்களும்,ஆறும் ஓடிய நம் நாட்டில் இன்று வறட்சியே அதிகம்,பிறமொழியின் மீதும் பிறநாட்டின் மீது கொண்ட மோகத்தால் நம் முப்போகம் கொண்ட நாடு வலுவிழந்து நிற்கிறது.

இயற்கை காண சுற்றிலா என்று பெயர்க்கொண்டு அதற்கென பேருந்தோ,ஊர்த்தியோ அல்லது ரயிலோ பிடித்து தொலைதுரம் சென்று செல்லவேண்டி இருகிறதே.உண்மையில் அருகிலே இருந்த நம் வளம்,இயற்க்கை அழகினை நம் கையினாலே அழித்து அலங்கோலமாக்கி இன்று அதனை காணவே ஆசையாய் பயணம் செல்கிறோம்.இது எந்த அளவான மூடத்தனம்.

வெளிநாட்டவன் கண்டு வியந்த நம் மொழி,செல்வம்,அறிவு,கலை,அழகு,இயற்கை அனைத்தையும் அழித்து இன்று அவன் நாட்டை அதுவும் வெறும் கட்டிடங்களை காண பயணம் செல்ல ஆர்வத்துடன் இருக்கிறோமே. இதனை காணும் தமிழனே உன் மனம் கொதிகிறதா ? அல்லது இனிக்கிறதா ?மற்றவனை குறை சொல்லவே நமக்கு நேரம் இல்லை இதில் இதனை எங்க நான் கண்டு கொதித்தெழ என்கிறாயா ? அதுவும் சரிதான் வெளிநாட்டவன் அவன் மொழியினையும்,பழக்கத்தினையும் நம்மில் குறை சொல்லுதலையும் பொறாமையையும் வைத்து தானே எளிதில் புகுத்தி வீழ்த்தினான்.

முடிவுரை:-

தமிழ் வழி வாழ்த்துக்கள், தமிழ் வழி தகவல் பரிமாற்றங்கள் இவைகளே தமிழர்களின் தமிழ் உணர்வுகளை என்றும் பிரதிபலிக்கும். ஆதலால் அதன் சேவைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும். முகப்புதிரையில் நம்மவர்கள் பலர் தங்கள் பக்கங்களில் ஆங்கில வாசகங்களை அதிகம் படைக்கிறார்கள். இது தமிழன் தன் திறனை ஆங்கிலத்தில் கொட்டுவது போன்றதாகும். படைப்பாளிகளே மொழி வளர்ச்சியின் முதன்மையானவர்கள். அவர்கள் அவ்வாறு செய்து தவறான உணர தமிழ் எழுத்தின் வலிமையையும், திறமையும், பெருமையும்

வெளிப்படுத்தும் அளவிற்கு நல்ல நல்ல படைப்புகளை அவர்களைவிட அதிக அளவில் தமிழில் தந்து தமிழ் படைப்பாளிகளுக்கு நல்ல அங்கிகாரம் வழங்க வேண்டும். வாழ்க தமிழ்..!!

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (22-Jan-16, 11:15 am)
சேர்த்தது : நிஷாந்த்
பார்வை : 2496

மேலே