மனசெல்லாம் 2

[ சித்தார்த்,கார்த்திக் 12ம் வகுப்பில் அட்டெம்ப்ட் வைத்து பிறகு கல்லூரி சென்று 2வருடம் ஆகிற்று,ராதிகாவும் இலையாவும் 11ம் வகுப்பே பயில்கின்றனர் ]
ராதிகா,இலையா இருவரும் மாலை நேரத்தில் கணினி வகுப்புக்கு செல்வர் வர இரவு 7.30 அல்ல 8 மணி ஆகிவிடும்.தினமும் பேசிக்கொண்டே நடந்துவிடுவர்.சித்தார்த்,கார்த்திக் வழியில் அனுதினமும் நின்று பேசுவதை கண்டு.
இலையா : ராதிகா இவர்களை பற்றி நம் வீட்டில் ரவுடி என்று சொன்னாரே .என்ன இது தினமும் வழியில் நிற்கின்றனர்.
ராதிகா : சரி தான்,நாம் அவர்களை காணாது கிழே பார்த்தபடி சென்றுவிடுவோம் வா .
இலையா : ராதிகா அவர்கள் நம்மை பின் தொடர்கிறார்கள்.
ராதிகா :வா,கணினி பயிற்சி இடம் வந்துவிட்டது உள்ளே சென்று விடுவோம்.
[ விரைந்து உள்ளே சென்று பெரும் மூச்சி விட்டனர்]
இலையா :அவர்களை கண்டாலே பயமாக உள்ளது அல்லவா ராதிகா .
ராதிகா :அவர்களை காட்டிலும் இதோ வருகிறாரே இவனை பார்த்தால் தான் பயமாக உள்ளது.பாடம் என்று படுத்தி எடுக்கிறான்.சிக்கிரம் கண்ணினியை ஆன் பண்ணு டி.
இலையா :இதோ செய்து விட்டேன் ,ராதிகா சரி தான் இந்த லூசுக்கு அவனுங்க எவ்வளவோ பரவாயில்ல.
ராதிகா :இலையா அந்த டபரா தலையன் வந்துட்டான் நேத்து சொன்ன கோடிங் பத்தி கேட்பான் டி.
இலையா :நான் எழுதிட்டனே அச்சோ நீ எழுதலையா ?
ராதிகா :அடிபாவி என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா அச்சச்சோ அந்த மண்வெட்டி தலையன் என்ன திட்டுவானே ...
இலையா :அவன் வரான் நீ அவன் எதாச்சும் கேட்டா நோட்டு விட்டுல மறந்து வச்சிடணு சொல்லிடுடி.
ராதிகா :சரி முயற்சி பனுரன் அவன் அத நம்பணுமே அச்சோ ம்ம் பாப்போம்.எல்லாம் நல்லதுக்கே ராதிகா,வருத்தபடாத.
[தானே திடம் கொண்டாள். வாத்தியார் வந்தார் அவரின் பெயர் ராஜு]
ராஜு :இங்க சேர்க்கை நடகிரனால இன்றைக்கு வகுப்பு கிடையாது நீங்க எதாச்சும் சிஸ்டம் ல செய்தட்டு இருங்க..
இலையா :என்ன ராதிகா நம்ம சார் தான இது ரொம்ப நல்ல செய்திலான் சொளுறாரு ?
ராதிகா :ஐ ஜாலி என்கிட்ட கோடிங் பத்தி கேட்கலையே...
[ இருவரும் கைகளினால் ஹாய் பை அடித்துக்கொண்டனர் ]
ராஜு :ராதிகா இங்க வா ..
இலையா :அச்சோ நீ பேசுனது கேட்டுச்சோ ராதிகா ?
ராதிகா :[அமைதியாக ] நீ பயம் புடுத்தாத,உன் நோட்ஸ் தா ..
ராஜு :என்னால இந்த வேலையில உங்கள கவனிக்க முடியாது,நா எழுதிட்டு வர சொன்ன கோடிங் இருக்குல..
[ சொல்லி முடிக்கும் முன்னே இதோ சார் ]
குட் அத போட்டு ஔட்புட் வரவைங்க...
ராதிகா :கண்டிப்பா ,சார் ...
இலையா :என்ன டி ரொம்ப ஹாப்பி அ வர அவரு திட்டலையா ?
ராதிகா :அச்சோ,நீ வேற செம காமெடி கோடிங் சொனதும் உன் நோட்ஸ் கமிசன் நம்பிடாறு..
இலையா :சரியான லூசா இருப்பாரோ யாரதுன்னு கூட பாக்காம,இப்படியா ?
[ ராதிகா வெகு நேரம் எங்கையோ பார்த்தபடி உறைந்திருந்தால் ]
இலையா :ராதிகா என்ன சத்தத்த காணோம்,அங்க என்ன பாக்குற ?
[ பார்த்த அடுத்த நொடி இலையாயும் உறைந்தபடி அங்கே எதையோ காண்கிறாள் ]
[என்ன அது என்றால் சித்தார்த் மற்றும் கார்த்திக் கண் அடித்து கை அசைத்தனர்...]
சித்தார்த் :மும்முரமாக என்னவோ பேசினர் கணினி வகுப்பின் ஆசிரியரான ராஜுவிடம் ..
ராதிகா :இலையா என்ன இது இவர்கள் இங்கே,,,!
இலையா :ஒன்றும் புரியவில்லையே !
கார்த்திக் :சித்தார்த் அங்க பாருடா மச்சான் என் செல்லத்தோட முகம் அதிர்ச்சியா இருக்கு ...
சித்தார்த் :[ சிரித்தபடி ] வா அவங்க வெளிய வரவும் பாத்துப்போம்.

நடக்க விருப்பத்தை நாளை காண்போம் ......

எழுதியவர் : ச.அருள் (25-Jan-16, 4:40 pm)
பார்வை : 272

மேலே