குடியரசு தினம் நாம் நமது ஜனநாயக மாண்பை எப்படி கடைபிடிக்கிறோம்

இனிய நண்பர்களே,

இன்று 67வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடுகிறோம். குடியரசு என்பது, வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஜனநாயக மாண்பை குறிப்பதேயாகும்.

கீழ்கண்டவற்றில் ஏதாவது செய்துவிட்டு வருந்தியது உண்டா?

1. குடியரசு தினம் கொண்டாடும் நண்பர்களே, ஒரு ஆட்சி அமைவதற்கு வாக்களிக்கும் நீங்கள் அதற்கு பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதை நினைத்து வருந்தியது உண்டா ?

2. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கொள்ளை மேல் கொள்ளை அடிக்கிறார்களே இப்படிப்பட்ட ஆட்சி அமைவதற்கு நாமே காரணமாக இருந்திருக்கிறோமே என்று வருந்தி , நல்ல கட்சிக்கு வாக்களித்தது உண்டா?

3. இலவசத்துக்கு ஆசைப்பட்டு வாக்கு போட்டு, இலவச பொருட்கள் தரமற்றதாய் இருக்கும் போது இப்படி ஏமார்ந்துவிட்டோமே என்று வருந்தியது உண்டா?

4. நல்ல குடிமகனாக வாழ உறுதி ஏற்றது உண்டா?

5. தப்பு என்று தெரிந்து தப்பு செய்கிறவர்களுக்கு துணை போகிறோமே என்று வருந்தியது உண்டா?

6. வீட்டையும் ,நாட்டையும் தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும் என்று எண்ணியது உண்டா?

7. புகை பிடித்தல் தவறு என்று தெரியும், இருந்தும் புகையை மற்றவர்கள் முகத்தில் படுபாமாறு புகைப்பது தவறென்று உணர்ந்தது உண்டா?

8. பான்பராக் போதை பொருள் போட்டு மக்கள் நடந்து போகும் சாலையில் கதக் கதக் என்று துப்புறீங்களே அதற்கு வருந்தியது உண்டா?

9. மதுவருந்திவிட்டு மக்கள் கூடும் இடத்திலும்,பேருந்திலும் ஏறி மற்றவர்களை முகம் சுளிக்க வைக்குறீங்களே, மதுவை விட்டோளித்துவிட்டு அதில் இருந்து மீண்டு நல்வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைத்ததி உண்டா?

10. பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் புற்று நோய் வரும் என தெரிந்தும், அதன் பயன்பாட்டை உங்களிடம் இருந்து குறைத்து கொள்ள எண்ணியது உண்டா?

11. குடிநீரை ,மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தது உண்டா?

12. விவசாயம் காக்கப்படவேண்டும் என்று சிறு முயற்சியாவது செய்தது உண்டா?

இந்த தேசத்தை உயிராக நினைப்பது உண்மை என்றால் இதில் ஏதாவது ஒன்றை கடைபிடிப்பீர்கள். இல்லை எனில் நீங்க குடியரசு தினத்தையோ, சுதந்திர தினத்தையோ கொண்டாடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (26-Jan-16, 7:53 am)
சேர்த்தது : vaishu
பார்வை : 1703

மேலே