மனசெல்லாம் 5

{ கதை சுருக்கம் : பதில் நாளை சொல்கிறேன் என்று இலையா சொல்ல காத்திருக்கும் கார்த்திக் }
[ ராதிகா பள்ளியிலும் பயத்தோடே இருக்கிறாள்.சுற்றி பூங்கவனதில் சுற்றி திரியும் பட்டாம்பூச்சி போல் திரிந்த பெண்ணவள்,வறண்ட பாலைவனத்தில் தாகத்தில் திரிந்த குழந்தை மிருகத்தை கண்டதுப்போல் அப்படி ஒரு பயம் முகத்திலும்,நெஞ்சிலும்.இலையாவும் பள்ளியில் இதையே எண்ணி பயத்தில் இருக்க மாலை நேரம் வந்தது.ராதிகா,இலையா அமைதியில் மெல்ல நடந்த படி பயத்தில் கைகோர்த்து கணினி பயிற்சி நிலையம் சென்றனர்.ராதிகா தன் உயிர் தோழிக்காக அதனை ஏற்று மறுவார்த்தை ஏதும் கேளாது அமைதியிலே நிலைத்திருக்க,இலையா தன் தோழியை துன்ப படுத்துகிறோமே என்று பதறியபடி அமைதியில் திளைத்தால்.
சுற்றிலும் உள்ள கணினிகள் எல்லாம் தங்களை மிரட்டும் மிருகமாய் தோன்ற,ஆசிரியர் அவர் கேட்க்கும் கேள்விக்கு பதிலற்று திட்டும் வாங்கினர்.கணினி பயிற்சி நேரம் முடிய பயத்தோடு ராதிகா,இலையா காலினை வெளிய எடுத்து வைத்தனர்,அவர்களின் கண்கள் அங்கும் இங்கும் பயந்தோடும் பறவைகள் போல பறந்தன.எங்கும் அவர்களை காணாது சிறு மகிழ்ச்சி உதிக்க இருந்தும் நெஞ்சில் பாரம் வீடு செல்லும் வரையிலும் கண்ணில் அவர்கள் பட்டுவிடாது இருக்க மனம் துடிக்க.நேற்று சித்தார்த்,கார்த்திக் மறித்த இடத்திற்கு நெருங்கினர். ]

இலையா :[ கையினை பிடித்து ] வா நம்ம குறுக்கு வழியா போலாம் ...
ராதிகா :[ அமைதியோடு பின்தொடர்ந்தாள் ]
[ சட்டேன்று சித்தார்த்,கார்த்திக் சிரித்தபடி முனாடி நின்றனர் ]
கார்த்திக் :முடிவு சொல்வதா சொன்னியே ?
ராதிகா :[ பதட்டத்துடன் ] அவ படிப்பு முடிஞ்சதும் வெளிவூர் போய்டுவா அண்ணா அவளை தொந்தரவு செய்யாதிங்க ப்ளிஸ் புரிஞ்சிக்கோங்க .

[ சொன்ன அடுத்த நொடி பேச விளையும் போது விரைவாக இலையா கைபிடித்து எழுத்து சென்றால் ]
[ செல்லும் வழியில் இருபத்திற்க்கும் மேற்ப்பட்ட நபர்கள் நின்று. " இது ஒத்துட்டு இருக்காதுடா மூஞ்சப்பாத்த தெரியல " என்றனர்.நிற்காது கைவிடாது இருவரும் நடக்க குறுக்கு வழியின் முடிவில் சித்தார்த்,கார்த்திக் வழியினை அடித்தபடி ]
[ ராதிகா,இல்லையா செல்ல வழியில்லாது திகைத்தபடி .....]

நேர்ந்ததை நாளை பார்ப்போம் .....

எழுதியவர் : ச.அருள் (30-Jan-16, 1:36 pm)
பார்வை : 257

மேலே